இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி நிறுவப்பட்டதன் 41 வது ஆண்டு விழா பேரார்வத்துடன் கொண்டாடப்பட்டது!

இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி நிறுவப்பட்டு 41 ஆண்டுகள் நிறைவடைந்ததை 2021 டிசம்பர் 25 குறிக்கிறது. இந்த மகிழ்ச்சியான நிகழ்வைக் கொண்டாட இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உள்ள கட்சி அமைப்புகள் கூட்டங்களை நடத்தின. தில்லி, மும்பை, கனடாவில் டொராண்டோ மற்றும் பிற இடங்களில் கூட்டங்கள் நடைபெற்றன. இக்கூட்டங்களில் கட்சியின் பகுப்பாய்வு முன்வைக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து ஆர்வத்தோடு விவாதங்கள் நடைபெற்றன. விழாவைக் கொண்டாடும் வகையில் கலாச்சார நிகழ்ச்சிகளும், பாடல்களும், நடனங்களும் நடைபெற்றன.

Continue reading