மோசமான சூழ்நிலையிலும், கொரோனா நெருக்கடியை துணிவோடு எதிர்கொள்ளும் செவிலியர்கள்

கொரோனா தொற்று நோய் (கோவிட்-19) தீவிரமாகப் பரவிவரும் சூழ்நிலையில் மக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சேவைகளை வழங்க வீரத்தோடு வேலை செய்து வரும் முன்னணி சுகாதாரப் பணியாளர்களில் செவிலியர்களும் ஒரு அங்கமாவர். செவிலியர்கள் இல்லாமல் மருத்துவமனையில் எந்தவிதமான மருத்துவ சேவையையும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. பொதுவாக நம் நாட்டில் செவிலியர்களின் நிலைமைகள் குறித்தும், குறிப்பாக இந்த நேரத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் இந்திய ஐக்கிய செவிலியர் சங்கத்தின்

Continue reading

நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள நிலையில் தொழிலாளர்கள் நிலை

ரயில், வங்கி மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் நிலை. ஊரடங்கு நிலைமைகள் இந்தியாவெங்கும் மார்ச் 24 ஆம் தேதி தொடங்கியதிலிருந்து, பல்வேறு துறைகளில் உள்ள தொழிலாளர்களின் நிலைமைகள் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. ஒரு பக்கம் வேலை இல்லாததால் அவதிப்படுபவர்கள் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்திற்காக கடுமையாக உழைப்பவர்கள் உள்ளனர். சுகாதாரத் துறை ஊழியர்களும் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய அன்றாட தேவைகளை வழங்குவதில் சில்லறை வணிக

Continue reading

கொரோனா வைரசு (கோவிட் -19) நெருக்கடி

சுகாதாரத் தொழிலாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்கிறார்கள் கொரோனா வைரசு தொற்றுநோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளை கவனித்துக் கொள்வதற்காக நாடு முழுவதும், மருத்துவர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆஷா தொழிலாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உதவியாளர்களும் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களும் இரவும் பகலும் உழைத்து வருகின்றனர். தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்கள் (பிபிஇ) போதுமான அளவிலோ அல்லது முழுவதுமாக இல்லாமலோ பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சேவைகளை

Continue reading

மக்களின் உரிமைகளும் அரசின் கடமைகளும்

கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த இந்திய அரசு 21 நாள் ஊரடங்கை அறிவித்து பல நாட்கள் கடந்துவிட்டன. ஊரடங்கின் முதல் வார அனுபவம், ஒரு போர் கால அடிபடையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல பிரச்சனைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இது அனைத்து மக்களும் பங்கேற்க வேண்டிய ஒரு பொதுவான போராட்டமாகும். இதற்கு அரசாங்கத்தின் திறமையான தலைமை தேவைப்படுகிறது. வேலை செய்பவர்களுடைய உரிமைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே அவர்களால் தங்களுடைய கடமையைச் செய்ய

Continue reading

தடுப்புக்காவல் – இந்திய அரசியல் சட்டத்தின் ஒரு சனநாயக விரோத அம்சம்

நவீன சனநாயகத்தின் கொள்கைகளில் ஒன்று, எந்தவொரு குடிமகனையும் காரணமின்றி அரசால் கைது செய்யக் கூடாது என்பதாகும். இந்தக் கொள்கையை இந்திய அரசு பரவலாக மீறுகிறது. தடுப்புக் காவலுக்கான சட்டங்களை இயற்ற அரசியலமைப்புச் சட்டம், சட்டமன்றத்தை அனுமதிக்கிறது. ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA), தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) ஆகியவை அதிகாரபூர்வமாக பாதுகாப்புப் படையினர் விருப்பம்போல யாரையும் கைது செய்வதற்கும்

Continue reading

தீவிரமடைந்துவரும் முதலாளித்துவ நெருக்கடி

உலக அளவிலும் இந்தியாவிலும் முதலாளித்துவ அமைப்பு ஆழமான நெருக்கடியில் சிக்கியுள்ளது. இது சமுதாயத்தின் அனைத்து முக்கிய முரண்பாடுகளையும் கூர்மைப்படுத்தி வருகிறது. உலகளாவிய நெருக்கடி நெருக்கடியிலிருந்து மீட்சி மிக அருகில் இருப்பதாக பல்வேறு அரசியல் தலைவர்கள் மீண்டும் மீண்டும் கூறி வந்தாலும், உற்பத்தி நடவடிக்கைகள் 2008 ஆம் ஆண்டின் நெருக்கடிக்கு முன்னர் இருந்த நிலைக்கு இன்னமும் திரும்பவில்லை. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் பெரும்பாலான முதலாளித்துவ நாடுகளில் உற்பத்தி, வளர்ச்சி பெறவில்லை.

Continue reading

கொரோனா வைரஸை எதிர்த்த போராட்டத்தில் ஒத்துழைப்போம்!

இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி – மத்தியக் குழுவின் அறைகூவல், மார்ச் 26, 2020 கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ், அனைத்து மக்களின் உயிர்களுக்கும் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்த வைரஸால் உலகில் இதுவரை 21,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல நாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இந்த தொற்று நோய் உள்ளவர்களின் எண்ணிக்கை இதுவரை குறைவாக உள்ளது, ஆனால்

Continue reading

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டணியை எதிர்க்க வேண்டும்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2020 பிப்ரவரி 24 -25 தேதிகளில் இந்தியாவுக்கு வந்திருந்தார். இந்த வருகையானது, இந்திய முதலாளித்துவ ஏகபோகங்களும், அமெரிக்க முதலாளித்துவ ஏகபோகங்களும் இந்திய – அமெரிக்க உறவை வலுப்படுத்துவதில் காட்டும் முக்கியத்துவத்தை காட்டியது. . இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ முக்கியக் கூட்டணியை வலுப்படுத்துவதாகும். மூன்று பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்காவில் தயாரிக்கப்படும் அதிநவீன இராணுவ ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்குவதாக

Continue reading

ஊரடங்குச் சட்டம் எனப்படும் பிரிவு 144 அமைதியான முறையில் மக்கள் கூடுவதற்கான உரிமையை மறுக்கிறது

பிரிவு 144 – காலனியத்தின் ஒரு மிச்சம்; அது உடனடியாக அகற்றப்பட வேண்டும்! விசாரிக்காமலேயே, அமைதியாக கூடுவதற்கான குடிமக்களின் அடிப்படை உரிமையைப் பறிக்க குற்றவியல் நடைமுறைத் தொகுப்புச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 144 ஐ மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. பெங்களூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிரான போராட்டத்தின் போது, ​மாவட்ட நீதிபதியாக செயல்படும் காவல்துறை ஆணையர், நகரம் முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை (பிரிவு 144)

Continue reading

அனைத்துலக மகளிர் தினம் 2020 : போராடும் இந்தியப் பெண்களுக்கு செவ்வணக்கம்! மக்களதிகாரத்திற்கான போராட்டத்தை முன் கொண்டு செல்வோம்!

இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி – மத்திய குழுவின் அறைகூவல்,  மார்ச் 1, 2020 இந்த ஆண்டின் அனைத்துலக மகளிர் தினமான மார்ச் 8 ஐ நெருங்கும் வேளையில், இலட்சக்கணக்கான இந்தியப் பெண்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர். அவர்களில் இளம் மற்றும் முதியவர்கள், கைக்குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள், பாட்டிமார்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்களும், பல்வேறு துறைகளில் வேலை செய்பவர்களும் உள்ளனர். தில்லி, அலிகார், லக்னோ, கயா, ஜெய்ப்பூர், கொல்கத்தா, பாட்னா மற்றும்

Continue reading