நமது அன்புக்குரிய தோழர் தங்கசாமி வில்சன், 2021 அக்டோபர் 20 ஆம் தேதி இயற்கை எய்தியதை பெருந் துயரத்தோடு இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சியின் மத்தியக் குழு அறிவிக்கிறது. தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தொழிலாளி வர்க்கக் குடும்பத்தில் பிறந்த தோழர் வில்சன் சிறுவயதிலிருந்தே கம்யூனிச கொள்கைகளின் பால் ஈர்க்கப்பட்டார். கட்சி மற்றும் அதன் கொள்கையின் மீது அவருக்கு இருந்த முழு நம்பிக்கையை எதனாலும் அசைக்க முடியவில்லை. அவர் உழைக்கும்
Continue reading
அன்புத் தோழர் வில்சனுக்கு செவ்வணக்கம்!
இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் பொதுச் செயலாளர் – தோழர் லால் சிங்கின் இரங்கல் செய்தி : தோழர்களே, நம்முடைய அன்பிற்குரிய தோழர் டி வில்சன் 20-10-2021 அன்று மறைந்துவிட்டார் என்ற மிகவும் துயரமான செய்தி நேற்று எங்களுக்குக் கிடைத்தது. இளமையான தனது 57 வது வயதில், குணப்படுத்த முடியாத ஒரு கொடிய நோயை எதிர்த்து அவர் ஒரு நீண்ட தீரமான போராட்டம் நடத்திய போதிலும், இறுதியில் அவரை நேசிக்கும்
Continue readingஅதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் விவசாயிகளின் மோசமான நிலையை வெளிப்படுத்துகின்றன
பல நூற்றாண்டுகளாக விவசாயம் சமுதாயத்தின் முதுகெலும்பாக கருதப்பட்டு வந்தாலும், அதில் ஈடுபட்டு வருபவர்களுக்கு இப்போதெல்லாம் அது போதுமான வருவாயைக் கொடுப்பதில்லை. 2021 செப்டம்பர் 10-இல், தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள நிலைமை மதிப்பீட்டு களஆய்வு (எஸ்ஏஎஸ்), நாட்டின் விவசாயிகளின் பொருளாதார நிலைமைகள் குறித்த மிக விரிவான அதிகாரப்பூர்வ ஆய்வறிக்கையாகும். 2019 இல் நடத்தப்பட்ட இந்த களஆய்வு, சூலை 2018 முதல் சூன் 2019 வரை 12 மாத காலத்திற்கு புள்ளிவிவரங்களை
Continue reading
தமிழ்நாட்டில் வாகன உற்பத்தித் தொழிலாளர்கள் மோசமான வாழ்வாதார பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்
இந்த ஆண்டு செப்டம்பரில், ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டிலுள்ள தனது உற்பத்தி தொழிற்சாலையை மூடப்போவதாக அறிவித்தது. இதனால், கிட்டத்தட்ட 4,000 நிரந்தரத் தொழிலாளர்களும் சுமார் 40,000 ஒப்பந்த அல்லது தற்காலிக தொழிலாளர்களும் வேலையிழப்பார்கள். ஃபோர்டுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதிரி பாகங்களை உற்பத்தி செய்து கொடுக்கும் 75 பெரிய நிறுவனங்களும், 200 க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களும் மூடப்படும் அபாயம் உள்ளது. சென்னையிலுள்ள ஃபோர்டு தொழிற்சாலை மூடப்படுவதை எதிர்த்து
Continue reading
உத்திர பிரதேசத்திலும், அரியானாவிலும் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலைக் கண்டிப்போம்!
அக்டோபர் 3 ம் தேதி, உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் அந்த மாநில துணை முதலமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் மீது அமைச்சரின் வாகனங்கள் வேண்டுமென்றே மோதியதில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். அமைச்சரோடு வந்தவர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த விவசாயிகள் மீது துப்பாக்கியால் சுட்டதால் மேலும் பலர் காயமடைந்தனர். அந்த வாகனங்களை முன்னணியில் வழி நடத்திச் சென்ற
Continue reading
தேசிய பணமாக்கும் திட்டத்தை எதிர்த்து ரயில்வே தொழிலாளர்கள் ஆர்பாட்டம்
செப்டம்பர் 13-லிருந்து 18 வரையிலான வாரத்தில் ஆயிரக்கணக்கான ரயில் தொழிலாளர்கள் நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி ஆர்ப்பரித்தனர். பணமாக்குதல் என்ற பெயரில் இந்திய ரயில்வேயின் பல்வேறு சொத்துக்களை தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய ரயில்வேவை தனியார்மயமாக்குவதற்கு எதிராக ரயில்வே தொழிலாளர்கள் போராட்ட வாரத்தைக் கடைபிடித்தனர். 2021 ஆகஸ்ட் 23 அன்று அறிவிக்கப்பட்ட பொதுச் சொத்துக்களைப் பணமாக்கும் திட்டத்தில், இந்திய ரயில்வேக்கு சொந்தமான சொத்துக்கள் 25%
Continue reading
வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கையிலும், தரத்திலும் கடுமையான சரிவு
நம் நாட்டின் மக்கள் தொகையில் மிகப் பெரும்பாலானோர் தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்ட முடியாமல் தத்தளித்து வருகின்றனர். இலட்சக்கணக்கான குடும்பங்கள் மனித வாழ்வின் விளிம்பில், வருமான இழப்பை ஈடுகட்ட பணம் கொடுக்கக் கூடிய எவரிடமும் கடன் வாங்கி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். வேலையில்லா பிரச்சனை மென்மேலும் தீவிரமடைந்து வருகிறது. அது போலவே, நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் கடனாளிகளாக ஆகி வரும் பிரச்சனையும் அதிகரித்து வருகிறது. நீண்ட வரிசையில் வேலை தேடும் இளைஞர்கள். இந்தியாவின்
Continue readingஅரசின் சொத்துக்களை பணமாக்கல் திட்டம் – தனிப்பட்ட முதலாளித்துவ லாபத்திற்காக பொதுச் சொத்துக்கள் கொள்ளை
உள்கட்டுமானத்தில் உள்ள பொதுச் சொத்துக்களை பணமாக ஆக்கும் ஒரு திட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகஸ்ட் 23 அன்று அறிவித்தார். இதன் மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளில் ஆறு லட்சம் கோடி ரூபாயை அரசாங்கம் வசூல் செய்யும் திட்டம் இருப்பதாக அவர் கூறினார். இந்த திட்டத்தின்படி உள்கட்டுமான சொத்துக்களான சாலைகள், ரயில்வே நிலையங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி சுரங்கங்கள், மின்சார வழிகள் லைன்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு
Continue reading27 செப்டம்பர் பாரத் பந்திற்கு முழுமனதோடு ஆதரவளிப்போம்!
தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் அறிக்கை – செப்டம்பர் 8, 2021 விவசாய சங்கங்களின் ஐக்கிய முன்னணியாகிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா 27 செப்டம்பர் 2021 அன்று அனைத்திந்திய முழு கதவடைப்பை – பாரத் பந்த் நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறது. பாராளுமன்றம் அங்கீகரித்த 3 விவசாய விரோத சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து ஓராண்டு நிறைவடைந்ததை அந்த நாள் குறிக்கிறது. தில்லியின் எல்லைகளில் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை விவசாயிகள்
Continue reading
கர்னாலில் விவசாய போராளிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலைக் கண்டனம் செய்வோம்
ஆகஸ்ட் 28 அன்று அரியானாவிலுள்ள கர்னாலுக்கு அருகிலுள்ள பாஸ்தாரா சுங்கச்சாவடியில், அரசின் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியிருக்கிறது. அரியானா முதல்வர் உரையாற்றும் ஒரு மாநில அரசு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க கர்னாலை நோக்கிச் சென்ற விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியிருக்கின்றனர். காவல்துறை விவசாயிகளை கொடூரமாக தாக்கியதையடுத்து விவசாயிகள் நெடுஞ்சாலைகளை தடுத்து மறியலில் ஈடுபட்டனர். தடியடியில் பல விவசாயிகள் மிகவும் மோசமாக
Continue reading