தொழிலாளர் ஒற்றுமைக் குரல் கண்டனம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், வருவாய்துறை கோட்டாட்சியர், வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சி, பேரூராட்சி உட்பட வேளாண்மைத் துறை, தொழிலாளர் நலத் துறை, சுகாதாரத் துறை போன்ற பல்வேறு அரசு அலுவலகங்கள் முன்பு எந்தவிதமான போராட்டங்களுக்கும் இனிமேல் அனுமதி இல்லை என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையால் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர ஆட்சித் தலைவர் அலுவலகம்
Continue readingதூத்துக்குடி மாவட்ட அரசு அலுவலகங்கள் முன் போராட்டங்கள் நடத்த அனுமதி இல்லை
தொழிலாளர்களை மேலும் தீவிரமாகச் சுரண்ட வேண்டுமென பொருளாதார ஆய்வறிக்கை அழைப்பு விடுக்கிறது:
முதலாளித்துவ நலன்கள் தேசிய நலன்களாக முன்வைக்கப்படுகிறது
சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கை, நிதி அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்டு, ஒன்றிய அரசின் வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, 22-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அது நம் நாட்டில் தொழிலாளர்கள் மீதான சுரண்டலை மேலும் தீவிரப்படுத்தப்படுத்த வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில் முதலீடு செய்யுமாறு வெளிநாட்டு முதலாளிகளை ஈர்ப்பதற்கு இது அவசியமான நிபந்தனையாக கூறப்படுகிறது. மேலும் இது பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கும்
Continue reading
நீண்ட நேர வேலை நாள் என்ற முன்வைப்பை எதிர்த்து பெங்களூருவில் ஐடி ஊழியர்கள் போராட்டம்
சூலை மாதம், கர்நாடக அரசு, கர்நாடக கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் ஒரு திருத்தத்தை முன்மொழிந்தது. தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவனங்களில் தற்போதுள்ள 10 மணி நேர வேலை நாள் என்பதற்கு பதிலாக 14 மணி நேர வேலை நாள் என்று மாற்றுவதற்கு இந்த திருத்தம் முயன்றது. தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்கள் இரண்டு வாரங்களுக்கு மேலாக போர்க்குணமிக்க வகையில் நிறுவனங்களின் நுழைவாயில் சந்திப்புகள் மற்றும் தெருமுனைப் பரப்புரைகள் மூலம் இந்த
Continue readingஇரங்கல் செய்தி
கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சாபுரம் ஊராட்சி, கலிங்கராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் முதுபெரும் தோழர் ப.கணேசன் அவர்கள் உடல்நிலக் குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 13-8-2024 அன்று தனது 73-ஆவது வயதில் காலமானார் என்ற செய்தியை இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறது. மறைந்த தோழர் கணேசன் அவர்கள் இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் தொடக்க காலம் முதல் கட்சி வேலையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்
Continue readingவிண்ணை முட்டும் உணவு விலைகள்:
வர்த்தக நிறுவனங்கள் கொழுப்பதற்காக உழைக்கும் மக்களின் வாழ்வோடு விளையாடுகின்றனர்
நம் நாடு முழுவதும் உள்ள உழைக்கும் மக்களும் அவர்களது குடும்பங்களும், போதுமான மற்றும் சத்தான உணவு இல்லாததால், தங்கள் குழந்தைகள் பட்டினி கிடக்காமல், அல்லது ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய கடினமானப் பணியை எதிர்கொண்டு வருகின்றனர். சத்தான உணவு மட்டுமின்றி, அத்தியாவசியமான பிற செலவுகளையும் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர். உணவு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், முட்டைகள் போன்றவற்றின் விலை
Continue readingகேரளா, இமாச்சல் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் பேரழிவுகள்:
முதலாளித்துவ இலாபங்களுக்காக கட்டுப்பாடற்ற நடவடிக்கைகளின் விளைவு
கேரளாவின் வயநாட்டில் கடந்த சூலை 30-ஆம் தேதி அதிகாலை ஏற்பட்டதொரு நிலச்சரிவில் 400 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 300 பேர் காணாமல் போயுள்ளனர். நிலச்சரிவால் வீடுகள் விழுங்கப்பட்டு, உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன, மேலும் கற்பனை செய்ய முடியாத துயரத்தில் ஒரு முழு சமுதாயமும் சிக்கித் தவித்துவருகிறது. இந்த சோகம், நம் இதயத்தை அடைத்தாலும், இது தனிப்பட்ட ஒரே நிகழ்வல்ல. இதே போன்ற பேரழிவான நிகழ்வுகள் சமீபத்தில் மலைகள் நிறைந்த மாநிலங்களான இமாச்சலப்
Continue readingசென்னை மாநகராட்சியின் தனியார்மய திட்டத்தை எதிர்த்து துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்
சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த துப்புரவு பணியாளர்கள், கடந்த பல மாதங்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஊதிய உயர்வு, நல்ல வேலை நிலைமைகள், பணி நிரந்தரம் உள்ளிட்ட துப்புரவு தொழிலாளர்களுடைய நியாயமான கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்துவதற்கு பதிலாக சென்னை மாநகராட்சி துப்புரவு பணிகளை தனியார்மயப்படுத்தி தொழிலாளர்களை அச்சுறுத்தி வருகிறது. அண்மையில் இந்த தொழிலாளர்களுடைய விடாப்பிடியான போராட்டத்தின் காரணமாக ஊதிய உயர்வு போன்ற சில கோரிக்கைகளை வென்றெடுத்து இருக்கிறார்கள்.
Continue reading
கொல்கத்தாவில் இளம் மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதைக் கண்டிப்போம்!
இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி மத்தியக் குழுவின் அறிக்கை, ஆகஸ்ட் 22, 2024 ஆகஸ்ட் 9 அன்று கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஒரு இளம் மருத்துவர் கொடூரமான முறையில் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை, இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி ஆழ்ந்த வருத்தத்துடனும் கோபத்துடனும் கண்டிக்கிறது. இந்தக் கொடூரமான சம்பவம் பணியிடங்கள் உட்பட, நாடு முழுவதும் பெண்கள் எதிர்கொள்ளும் பயங்கரமான பாதுகாப்பற்ற நிலையை
Continue reading
தொழிற்சாலை பெண் தொழிலாளர்கள் கடுமையாக சுரண்டப்படுகின்றனர்
இந்தியாவின் கிராமப்புறங்களில் விவசாயத்திலும் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களிலும் வருமானம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், உற்பத்தித் துறையில் வேலை தேடும் இளம்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிராமப்புறங்களிலிருந்து கல்லூரிக் கல்விக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், பன்னாட்டு நிறுவனங்களின் கைபேசிகள், மின்னணுக் கருவிகள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிற நுகர்பொருட்களை வெளிநாடுகளுக்கு தயாரித்து ஒருங்கிணைத்து வழங்கும் நிறுவனங்கள், தங்களுடைய இணைத்துப் பொறுத்தும் உற்பத்தி வரிசைகளில் வேலை செய்ய
Continue reading
20 இலட்சம் தகவல் தொழில்நுட்பத் துறை பணியாளர்கள் தொடர்ந்து சுரண்டப்படுகிறார்கள்
சூன் 10 அன்று, கர்நாடக அரசு, தகவல் தொழில்நுட்பம் (ஐடி) மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்களுக்கு, தொழிற்சாலைகள் நிலை ஆணைகள் சட்டம் 1946 இலிருந்து மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு விலக்கு அளித்தது. இந்த தொழிற்சாலைகள் நிலை ஆணைகள் சட்டம் விருப்பம்போல தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்வது, நீடித்த வேலை நேரம், பாலியல் துன்புறுத்தல்கள் போன்றவற்றிலிருந்து தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது, மேலும் தொழிலாளர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் இச்சட்டம் வழங்குகிறது. தொழில் செய்வதை
Continue reading