சர்வதேச மகளிர் தினம் 2024

எல்லாவிதமான சுரண்டல் மற்றும் பாரபட்சத்திலிருந்து பெண்கள் விடுதலை கோருகின்றனர் இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சியின் மத்தியக் குழுவின் அறிக்கை, மார்ச் 4, 2024 2024 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தில், பெண்களாகவும், தொழிலாளர்களாகவும், மனிதர்களாகவும் தங்கள் உரிமைகளைக் கோரி துணிவோடு குரல் எழுப்பும் நம் நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள பெண்களை இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி பாராட்டுகிறது. தொழிலாளர்களாக தங்கள் உரிமைகளுக்காக உறுதியான போராட்டம் நடத்தி வரும் ஆஷா

Continue reading


அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) உத்தரவாதம் அளிப்பது அவசியமானதும், சாத்தியமானதும் ஆகும்

அனைத்து விவசாயப் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை ஒட்டி மறுபடியும் எழுந்துள்ள போராட்டங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. 2022 சனவரியில் தில்லி எல்லையில் விவசாய சங்கங்கள் தங்களின் ஓராண்டுகால போராட்டத்தை நிறுத்திக் கொண்டபோது, ​​இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதாக மத்திய அரசு அவர்களுக்கு உறுதியளித்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு எந்த நடவடிக்கையும்

Continue reading


கடுமையான மின்கட்டண உயர்வும் ஸ்மார்ட் மீட்டர்கள் திணிப்பும்

தொழிலாளி வர்க்கத்தைக் கொள்ளையடிப்பது தீவிரமாகிறது மின்சாரத் துறையில் ஏகபோக முதலாளிகள் தங்கள் இலாபத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக செங்குத்தான கட்டண உயர்வையும் ஸ்மார்ட் மீட்டர்களையும் திணிக்கிறார்கள். சமீபத்தில், மும்பையில் உள்ள தனியார் மின்சார விநியோக நிறுவனமான டாடா பவர், மின் கட்டணத்தை பெரிய அளவில் உயர்த்த முன்மொழிந்துள்ளது. கட்டணங்கள் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்த்தப்பட உள்ளன. 100 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு யூனிட்டு ரூ. 3.74 லிருந்து ரூ. 7.37

Continue reading


தில்லியில் சர்வதேச மகளிர் தின ஆர்பாட்டத்தின் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு கண்டனம்!

மார்ச் 6 ஆம் தேதி, தில்லியில் பல பெண்கள் அமைப்புகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்தன. பெண் செயற்பாட்டாளர்கள் தங்கள் நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன்பே காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். மூத்த குடிமக்களையும் இளம் பெண்களையும் கூட அவர்கள் விட்டுவைக்க வில்லை. அவர்கள் காவல்துறையின் வண்டிகளில் அடைத்து, காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் உணவு மற்றும் சரியான கழிப்பறை வசதிகள் கூட இல்லாமல் 5-6 மணி

Continue reading

‌லெனின் மறைவின் 100-வது ஆண்டு நினைவு நாளில்:
லெனினின் படிப்பினைகள் இன்றியமையாத வழிகாட்டி

லெனின் 20-ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த புரட்சியாளரும்,  மிக உயர்ந்த மார்க்சிய கோட்பாட்டாளரும் ஆவார். சோவியத் ரஷ்யாவில் சோசலிசப் புரட்சியின் ஆரம்ப கட்டத்தில், 1924 சனவரி 21 அன்று அவர் இயற்கையெய்தினார். ஒரு கொலையாளி சுட்ட தோட்டா ஆறு ஆண்டுகளாக அவரது கழுத்தில் புதைந்திருந்த காரணத்தால் அவர் இறக்க நேரிட்டது. லெனின், போல்ஷிவிக் கட்சியை முன்னின்று கட்டியமைத்தவர் ஆவார். இது உலகின் முதல் சோசலிச அரசான சோவியத் யூனியனை நிறுவுவதற்கான

Continue reading


விவசாயிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்!

தங்கள் கோரிக்கைகளுக்காக தில்லியில் போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு முழு உரிமை உண்டு!

இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி மத்தியக் குழுவின் அறிக்கை, பிப்ரவரி 17, 2024

நமது நாட்டின் விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள கொடூரமான அடக்குமுறையை இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி  மிகுந்த கோபத்துடன் கண்டனம் செய்கிறது.

Continue reading


2023 – இல் இந்தியத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் போராட்டங்கள்

2023 ஆம் ஆண்டில், முதலாளி வர்க்கத்தின் சமூக விரோத, தொழிலாளர் விரோதத் தாக்குதல்களுக்கு எதிராக நமது நாட்டின் தொழிலாளர்களும் விவசாயிகளும் வீதிகளில் இறங்கி எண்ணெற்ற போராட்டங்களிலும் வேலைநிறுத்தங்களிலும் ஈடுபட்டனர். அனைத்துத் துறைகளிலும் உள்ள தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்திற்கான உரிமைக்காகவும், முதலாளிகள் விருப்பம்போல ஆட்குறைப்பு செய்வதற்கு எதிராகவும், வேலை நாளை நீட்டிப்பதையும் தொழிற்சங்கங்களை அமைப்பதற்கும் அவர்களின் உரிமைகளுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்குமான உரிமைகளைக் வெட்டிக் குறைக்கும் தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களுக்கு எதிராகவும் ஒன்று

Continue reading

இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சியின் 43-வது ஆண்டு விழா உரை

தொழிலாளர்களும் விவசாயிகளும் நிகழ்ச்சி நிரலை நிர்ணயிக்கும் ஒரு நவீன சனநாயகத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்போம்! தோழர்களே, நம் கட்சியின் 43-வது ஆண்டு விழாவிற்கு மத்தியக் குழுவின் சார்பாக உங்கள் அனைவரையும் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு ஆண்டு விழா நாளிலும், தொழிலாளி வர்க்கமும் நாட்டு மக்களும் எதிர்கொள்ளும் நிலைமையை நாம் மதிப்பாய்வு செய்கிறோம். ஆளும் முதலாளி வர்க்கத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது என்பதை நாம் விவாதிக்கிறோம். நம்

Continue reading

கொடூரமான நிர்பயா வல்லுறவு மற்றும் கொலை நடந்து 11 ஆண்டுகளுக்குப் பின்னர்

மிக மோசமான வன்முறை மற்றும் பாரபட்சங்களுக்கு பெண்கள் தொடர்ந்து பலியாகின்றனர் 2023 டிசம்பர் 16-இல், பணிபுரியும் இளம் பெண் ‘நிர்பயா’ தில்லியில் பஸ்சில் ஒரு கும்பலால் வல்லுறவு செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த கொடூர சம்பவம், தில்லி மற்றும் இந்தியா முழுவதும் பரவலான போராட்டங்களுக்கு வழிவகுத்தது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறிய அரசும், அதன் காவல்துறையும்

Continue reading

நாக்பூரில் உள்ள மராட்டிய சட்டமன்றத்தில் தொழிலாளர்களின் மாபெரும் பேரணி

மராட்டிய மாநில சட்டமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் நாக்பூரில், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC – ஏஐடியூசி) ஒரு பெரிய பேரணியை 18 டிசம்பர் 2023 அன்று நடத்தியது. மாநிலம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், குறிப்பாக பெண்கள் திரண்டு வந்து, அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராட முன்வந்தனர். இந்த பேரணிக்கு மாநிலத்தின் அனைத்து மூலைகளிலிருந்தும்

Continue reading