கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் உழவர்கள் போராட்டம் தொடர்கிறது

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் நிருபர் அறிக்கை பாரதிய கிசான் யூனியன்-உக்ரஹான் தலைமையிலான உழவர்கள் 17 அக்டோபர் 2024 அன்று பஞ்சாபின் பல்வேறு மாவட்டங்களில் தங்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களைத் தொடங்கினர். உண்மையில் நெல் கொள்முதலின் மோசமான அமைப்பு, டிஏபி உரத் தட்டுப்பாடு மற்றும் வைக்கோல் ஆகியவற்றையொட்டி பஞ்சாப் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. சுமார் 50 சுங்கச்சாவடிகளிலும், அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகள் முன்பும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மத்திய

Continue reading

கோரிக்கைகளை வலியுறுத்தி செயில் (SAIL) தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

அக்டோபர் 28 அன்று நாடெங்கிலும் உள்ள எஃகு தொழிலாளர் தொழிற்சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். போனசு மற்றும் கடந்த 31 மாதங்களாக நிலுவையில் உள்ள தொகை உட்பட தங்களுடைய 14 கோரிக்கைகள் கொண்ட பட்டியலை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். மேற்கு வங்காளத்திலுள்ள எல்லா செயில் தொழிற்சாலைகளிலும், துர்காப்பூர் எஃகுத் தொழிற்சாலையிலும், பர்ன்பூர் ஐஎஸ்சிஓ தொழிற்சாலையிலும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Continue reading


அனைத்து உழைக்கும் மக்களுக்கும் அரசு உத்தரவாதமான ஓய்வூதியத்திற்கான போராட்டத்தை முன் கொண்டு செல்வோம்

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (யுபிஎஸ்), ஆகஸ்ட் 24, 2024 அன்று மத்திய அரசு அறிவித்தது.  2004 சனவரி 1-ம் தேதிக்கு முன்பு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் (ஓபிஎஸ்) திரும்பக் கொண்டுவர வேண்டுமென்று வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தொடர்ந்து நடத்திவந்த பல போராட்டங்களின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் ஒருங்கிணைந்த

Continue reading


நில ஒருங்கிணைப்புச் சட்டம் – 2023 ஐ எதிர்த்து தமிழ்நாடெங்கிலும் ஆர்பாட்டங்கள்

விவசாய நிலங்களையும், பொது பயன்பாட்டுக்கான நிலங்களையும் பெரும் தொழில் நிறுவனங்கள் கைப்பற்றுவதை எளிதாக்கும் நோக்கத்தோடு தமிழக அரசு நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை அண்மையில் கொண்டு வந்துள்ளது. கடந்த 21.04.2023 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் தமிழ் நாடு நில ஒருங்கிணைப்புச் (சிறப்பு திட்டங்கள்) சட்டம் [Tamil Nadu Land Consolidation (for Special Projects) Act, 2023] சட்ட மசோதாவை அறிமுகம் செய்தார். விவசாயத்தையும், விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தையும் பாதிக்கக்

Continue reading


மாபெரும் அக்டோபர் சோசலிசப் புரட்சியின் படிப்பினைகள் இன்றும் வழிகாட்டுகின்றன

2024 நவம்பர் 7, ரஷ்யாவில் நடைபெற்ற மாபெரும் அக்டோபர் சோசலிசப் புரட்சியின் 107-ஆவது ஆண்டு விழாவைக் குறிக்கிறது. சோவியத் யூனியன் இன்று இல்லாவிட்டாலும், மீண்டும் மீண்டும் வரும் நெருக்கடிகளிலிருந்தும், ஏகாதிபத்தியப் போர்களிலிருந்தும் மனிதகுலத்தைக் காப்பாற்ற அக்டோபர் புரட்சி காட்டிய பாதை மட்டுமே ஒரே வழியாகும். முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கும், கம்யூனிசத்திற்கும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான கதவைத் திறப்பதற்கான ஒரே வழியும் இதுதான். முதலாளித்துவத்தின் முரண்பாடுகளைத் தீர்ப்பது, வர்க்கமற்ற கம்யூனிச சமுதாயமாக மாறுவதற்கு வழிவகுக்கும்

Continue reading

கட்சியின் மும்பை வட்டாரக் குழு ஏற்பாடு செய்த கலந்துரையாடல்
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கான காரணம்

ஆகஸ்ட் 9 அன்று கொல்கத்தாவில் இளம் மருத்துவர் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரமான நிகழ்வு, நம் நாட்டில் எல்லா இடங்களிலும் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறையை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது. இந்தப் பிரச்சனையின் தீவிரம், மூலக் காரணம் மற்றும் நிலைமையை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி விவாதிப்பதற்காக கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் மும்பை வட்டாரக் குழு, ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. விளக்கக்காட்சி உரையோடு தொடங்கி நடைபெற்ற

Continue reading

அநீதிக்கு எதிராக போராட்டம் நடத்தும் உரிமை அப்பட்டமாக மறுக்கப்படுகிறது

அரியானாவில் கடந்த சில மாதங்களாக ஆணவக் கொலைகள் நடந்து வருகின்றன. மாடு கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஆயுதமேந்திய கும்பல்கள் மக்களைப் படுகொலை செய்துள்ளன. இந்தத் தாக்குதல்களுக்குக் காரணமான பல்வேறு அமைப்புகளுக்கு அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவும் ஊக்கமும் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. இத்தகைய கொடூரமான செயல்களுக்கு எதிரான நமது மக்களின் கவலையைத் தெரிவிக்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்

Continue reading

வேலைகளில் இந்தியப் பெண்களின் பங்கேற்பு

இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (labour force participation ratio – LFPR) அதிகாரப்பூர்வமாக சுமார்  25 சதவிகிதம் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது பிரேசில் (43 சதவிகிதத்திற்கு மேல்) மற்றும் சீனாவை (60 சதவிகிதத்திற்கு மேல்) விட மிகவும் குறைவு. பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் என்பது வேலை செய்யும் வயதுடைய அனைத்துப் பெண்களில், ஊதிய வேலையில் ஈடுபடுபவர்கள் மற்றும் வேலை தேடும் பெண்களின் எண்ணிக்கையின் விகிதமாகும். பிப்ரவரி

Continue reading

உரிமைகளுக்காக சாம்சங் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் ஆலைத் தொழிலாளர்கள் தங்களுடைய தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம், ஊதிய உயர்வு மற்றும் நல்ல வேலை நிலைமைகள் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து செப்டம்பர் 9 அன்று தங்களுடைய வேலை நிறுத்தப் போராட்டத்தைத் துவக்கி இருக்கிறார்கள். ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள சுங்குவார்சத்திரத்தில் அமைந்துள்ள சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 1800 தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இங்கு ரெப்பிரிச்சுரேட்டர்கள், தொலைக்காட்சி பெட்டிகள் மற்றும் வாஷிங் மெஷின்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சாம்சங் இந்தியாவின்

Continue reading

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர்

ஆகஸ்டு 31 அன்று, டுன்சோ (Dunzo) அதன் 200 ஊழியர்களில் 150 பேரை வேலை நீக்கம் செய்தது. நிறுவனத்தை நடத்துவதற்கான செலவுகளைக் குறைப்பதற்காக தன்னுடைய 75 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்திருக்கிறது. இந்தத் தொழிலாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டது. மின்னஞ்சலில், தொழிலாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய நிலுவையில் உள்ள சம்பளம், பணிநீக்கத்திற்கான தொகை, விடுப்பு பணம் மற்றும் பிற நிலுவைத் தொகைகளை எதிர்காலத்தில், தேவையான நிதி கிடைக்கும் போது

Continue reading