ஊரடங்கால் சிக்கித் தவிக்கும் தினக் கூலித் தொழிலாளர்களை கொத்தடிமைத் தொழிலாளர்களாக நடத்தக் கூடாது!

ஏப்ரல் 20 முதல் நாட்டின் சில பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்காக ஊடங்கை ஓரளவு தளர்த்த மத்திய அரசு முடிவு செய்தபோது, ​ நாடெங்கிலும் சிக்கித் தவிக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களைப் பற்றி ஏப்ரல் 19 அன்று அது ஒரு பொதுவான செயல்முறையை (எஸ்ஓபி) வெளியிட்டது. இந்த பொதுவான செயல்முறை பின்வருமாறு கூறுகிறது – “கோவிட்-19 வைரஸ் பரவுவதால், தொழிற்சாலைகள், விவசாயம், கட்டுமானம் மற்றும் பிற துறைகளில் வேலை செய்து

Continue reading

குஜராத் வர்த்தகம் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பின் தொழிலாளர் விரோத கோரிக்கைகள்

குஜராத் வர்த்தகம் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (சேம்பர் ஆப் காமர்சு அன்ட் இன்டஸ்டிரிஸ் – GCCI) ஏப்ரல் 17, 2020 அன்று பின்வரும் கோரிக்கைகளை மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சரகத்தின் முன் வைத்துள்ளனர் : தொழில் தகராறுகள் சட்டத்தின் கீழ் தொழிற் சங்கம் அமைக்கும் உரிமையை குறைந்தபட்சம் 2020-21 நிதி ஆண்டில் நிறுத்தி வைக்க வேண்டும். ஊரடங்கு காலத்திற்கு நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் கொடுக்க

Continue reading

முடக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நிறப்பும் தொழிற்சாலைத் தொழிலாளர்களுடைய நிலை

கொரோனா வைரசு அச்சுறுத்தல் மற்றும் நாடு முடக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் திரவ வடிவிலான பெட்ரோலிய வாயு – சமையல் எரிவாயுவை (எல்பிஜி) சிலிண்டர்களில் நிரப்பும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுடைய நிலை குறித்து இந்தியன் ஆயில் எம்பிளாயிஸ் யூனியனின் தலைவர்களில் ஒருவரான தோழர் பிரீதியை தொழிலாளர் ஒற்றுமைக் குரல் (தொ.ஒ.கு) நேர்முகம் கண்டது. அந்த நேர்முகத்தின் விவரங்கள் பின்வருமாறு – தொ.ஒ.கு : கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரசு தாக்குதலின் காரணமாக,

Continue reading

அடக்கம் செய்வது தடுக்கப்பட்டால் எதிர் விளைவுகள் நேரும் – இந்திய மருத்துவர் சங்கம் எச்சரிக்கை

இறந்த மருத்துவர்களின் உடல்களை அடக்கம் செய்யவிடாமல் தடுக்கும் விதமாக சென்னையில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து இந்திய மருத்துவர் சங்கத்தின் (IMA) தலைமையகம் மிகுந்த கவலை கொண்டுள்ளது. தங்களுடைய கடமையை நிறைவேற்றுகின்ற பணியில் உயிரிழந்த மருத்துவர்கள் மிகவும் மோசமாகவும், அநாகரிகமான முறையிலும் நடத்தப்பட்டிருப்பது மிகுந்த கவலை அளிப்பதாக இருக்கிறது. இப்படிப்பட்ட தாக்குதல்களை மாநில அரசு தடுக்கவில்லை என்பது மேலும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இப்படிப்பட்ட மோசமான நிகழ்வுகளைத் தடுக்க அரசாங்கங்களுக்கு அதிகாரம் இல்லையானால்,

Continue reading

நாட்டிற்கு வெளிப்படையான எச்சரிக்கை

மருத்துவர்களுக்கு எதிரான வன்முறையைத்  தடுத்து நிறுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இந்திய மருத்துவர் சங்கம் (IMA) கேட்டிருக்கிறது. “மோசமான அவமதிப்புக்கும், வன்முறைக்கும் எதிராக நாம் செயலற்று இருப்பதை கொரோனா வைரசு மேலும் தெள்ளத் தெளிவாக நமக்கு உணர்த்தியுள்ளது. அருவருப்பும், சமூக புறக்கணிப்பும் நீக்கமற பரவியிருக்கிறது. நிர்வாகத்தால் அலைக்கழிக்கப்படுவது, அரசு வன்முறையே அல்லாமல் வேறில்லை. எங்களுடைய பொறுமையும், சுயகட்டுப்பாடும் பலத்தின் அறிகுறிகளாகும். வேலை செய்யுமிடங்களில் பாதுகாப்பு வேண்டும் என்ற

Continue reading

மோசமான சூழ்நிலையிலும், கொரோனா நெருக்கடியை துணிவோடு எதிர்கொள்ளும் செவிலியர்கள்

கொரோனா தொற்று நோய் (கோவிட்-19) தீவிரமாகப் பரவிவரும் சூழ்நிலையில் மக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சேவைகளை வழங்க வீரத்தோடு வேலை செய்து வரும் முன்னணி சுகாதாரப் பணியாளர்களில் செவிலியர்களும் ஒரு அங்கமாவர். செவிலியர்கள் இல்லாமல் மருத்துவமனையில் எந்தவிதமான மருத்துவ சேவையையும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. பொதுவாக நம் நாட்டில் செவிலியர்களின் நிலைமைகள் குறித்தும், குறிப்பாக இந்த நேரத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் இந்திய ஐக்கிய செவிலியர் சங்கத்தின்

Continue reading

நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள நிலையில் தொழிலாளர்கள் நிலை

ரயில், வங்கி மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் நிலை. ஊரடங்கு நிலைமைகள் இந்தியாவெங்கும் மார்ச் 24 ஆம் தேதி தொடங்கியதிலிருந்து, பல்வேறு துறைகளில் உள்ள தொழிலாளர்களின் நிலைமைகள் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. ஒரு பக்கம் வேலை இல்லாததால் அவதிப்படுபவர்கள் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்திற்காக கடுமையாக உழைப்பவர்கள் உள்ளனர். சுகாதாரத் துறை ஊழியர்களும் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய அன்றாட தேவைகளை வழங்குவதில் சில்லறை வணிக

Continue reading

கொரோனா வைரசு (கோவிட் -19) நெருக்கடி

சுகாதாரத் தொழிலாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்கிறார்கள் கொரோனா வைரசு தொற்றுநோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளை கவனித்துக் கொள்வதற்காக நாடு முழுவதும், மருத்துவர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆஷா தொழிலாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உதவியாளர்களும் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களும் இரவும் பகலும் உழைத்து வருகின்றனர். தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்கள் (பிபிஇ) போதுமான அளவிலோ அல்லது முழுவதுமாக இல்லாமலோ பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சேவைகளை

Continue reading

மக்களின் உரிமைகளும் அரசின் கடமைகளும்

கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த இந்திய அரசு 21 நாள் ஊரடங்கை அறிவித்து பல நாட்கள் கடந்துவிட்டன. ஊரடங்கின் முதல் வார அனுபவம், ஒரு போர் கால அடிபடையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல பிரச்சனைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இது அனைத்து மக்களும் பங்கேற்க வேண்டிய ஒரு பொதுவான போராட்டமாகும். இதற்கு அரசாங்கத்தின் திறமையான தலைமை தேவைப்படுகிறது. வேலை செய்பவர்களுடைய உரிமைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே அவர்களால் தங்களுடைய கடமையைச் செய்ய

Continue reading

தடுப்புக்காவல் – இந்திய அரசியல் சட்டத்தின் ஒரு சனநாயக விரோத அம்சம்

நவீன சனநாயகத்தின் கொள்கைகளில் ஒன்று, எந்தவொரு குடிமகனையும் காரணமின்றி அரசால் கைது செய்யக் கூடாது என்பதாகும். இந்தக் கொள்கையை இந்திய அரசு பரவலாக மீறுகிறது. தடுப்புக் காவலுக்கான சட்டங்களை இயற்ற அரசியலமைப்புச் சட்டம், சட்டமன்றத்தை அனுமதிக்கிறது. ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA), தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) ஆகியவை அதிகாரபூர்வமாக பாதுகாப்புப் படையினர் விருப்பம்போல யாரையும் கைது செய்வதற்கும்

Continue reading