ஊரடங்கிற்கு மத்தியில் – நாடெங்கிலும் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்க்கின்றனர்

தமிழ்நாட்டில் பி.எஸ்.என்.எல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்டனர் கொரோனா பெருந் தொற்றுநோய் சூழ்நிலையில் பி.எஸ்.என்.எல் நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதற்கு எதிராக தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் (டி.டி.சி.சி.டபிள்யூ) மற்றும் பி.எஸ்.என்.எல் பணியாளர் சங்கம் (பி.எஸ்.என்.எல்.யு) ஆகியவை மே 14 முதல், பல எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்தியுள்ளன. இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும், 22 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், அந்த வேலையை பல்வேறு தனியார்

Continue reading

தொழிலாளர் சட்டங்களில் கொடூரமான மாற்றங்களைக் கொண்டு வரும் முயற்சிகளை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்கள் போராடும்

மத்திய தொழிற்சங்கங்கள் வெளியிட்ட கூட்டறிக்கை மே 15, 2020 மே 22 அன்று நாடு தழுவிய எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு 2020 மே 14 அன்று நடைபெற்ற கூட்டத்தில், ஊரடங்கு காலத்தில் நாட்டில் உழைக்கும் மக்களின் நெருக்கடியான சூழ்நிலையை கவனத்தில் கொண்டு, இந்த சவாலை எதிர்கொள்ள ஐக்கிய நடவடிக்கைகளை மேம்படுத்துவதென முடிவு செய்தது. ஊரடங்கின் காரணமாக ஏற்கனவே ஆழ்ந்த துன்பத்திலும், துயரத்திலும் மூழ்கி இருக்கும் நாட்டின் தொழிலாளி

Continue reading

நமது உரிமைகள் மீதான தாக்குதலை உறுதியாகவும் ஒற்றுமையோடும் எதிர்த்துப் போராடுவோம்!

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் அழைப்பு, மே 18, 2020 தொழிலாளர் தோழர்களே, கொரோனா வைரசு தொற்றுநோய் என்ற பெயரில் மத்திய அரசாங்கம் அறிவித்த அவசரகால நிலையைப் பயன்படுத்தி முதலாளித்துவ வர்க்கம் நமது உரிமைகள் மீது இதுவரை கண்டிராத அளவில் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இந்தியா ஒரு மிகப் பெரிய பேரழிவைச் சந்தித்து வருகிறது. இரண்டு மாதங்கள் நிறைவடையவிருக்கும் நாடு தழுவிய ஊரடங்கின் விளைவாக கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரமான வேலைகளை

Continue reading

கொரோனா வைரசு தொற்றுநோயை ஒரு சாக்காக வைத்து தொழிலாளர்களைச் சுரண்டுவதைத் தீவிரப்படுத்தும் முதலாளி வர்க்கத்தின் திட்டங்களை உறுதியாக எதிர்த்துப் போராடுவோம்!

தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு சமுதாயத்தை நிறுவுவதற்கு ஒன்றுபடுவோம்! தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் அறிக்கை, மே 10, 2020 நாடு கொரோனா வைரசு பெருந் தொற்றுநோயை சந்தித்து வரும் சூழ்நிலையிலும் கூட, வரும் நாட்களில் தொழிலாளர்களைச் சுரண்டுவதைத் தீவிரப்படுத்த பல திட்டங்களை இந்தியாவின் மிகப் பெரிய முதலாளிகள் அறிவித்து வருகின்றனர். “பெருந்தொற்று நோயால் எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பது” என்ற பெயரில் மத்திய அரசாங்கமும் மற்றும் பஞ்சாப், குஜராத்,

Continue reading

கார்ல் மார்க்சின் 202 வது பிறந்தநாள் ஆண்டு விழா:

முதலாளித்துவத்திலிருந்து சோசலிச மாற்றத்திற்கு காலம் அழைப்பு விடுக்கிறது “ஆளும் வர்க்கங்கள் ஒரு கம்யூனிச புரட்சியால் நடுங்கட்டும். பாட்டாளி வர்க்கம் இழப்பதற்கு சங்கிலிகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. அவர்கள் வெல்வதற்கு ஒரு உலகம் இருக்கிறது. எல்லா நாட்டுத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்!” கம்யூனிஸ்ட் அறிக்கையின் இந்த புகழ்பெற்ற வார்த்தைகள் கார்ல் மார்க்சின் பிறந்த நாளான மே 5 அன்று உலகம் முழுவதும் எதிரொலித்தன. ஆளும் முதலாளி வர்க்கத்திற்கு எதிரான கோபம் உச்சத்தை

Continue reading

12 மணி நேர வேலையை அனுமதிக்கும் சட்டங்களை கண்டனம் செய்வீர்

நம் நாட்டின் தொழிலாளர்களின் உரிமைகள் மீது முதலாளி வர்க்கம் ஒரு மிகப் பெரிய தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. நாடு முழுவதும் முடக்கப்பட்டு, ஒரு தொற்றுநோய் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதலாளி வர்க்கம் ஒன்றன்பின் ஒன்றாக தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைத் தொழிலாளி வர்க்கத்தின் மேல் மூர்க்கத்தனமாக திணித்து வருகிறது. தொழிலாளர்களின் மிக அடிப்படையான உரிமைகளில் ஒன்று, வேலை நாளை 8 மணி நேரமாகவும், வாரத்திற்கு 48 மணி நேரமாகவும் வரையறை செய்திருப்பதாகும்.

Continue reading

தொழிலாளர்களின் நலன்களும் முதலாளிகளின் நலன்களும்

புதிய கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்திலும், பொருளாதார நடவடிக்கைகளை எவ்வளவு விரைவாகத் தொடங்க முடியுமோ அவ்வளவு விரைவாக மீண்டும் தொடங்க வேண்டுமென்ற விருப்பத்திலும், சமூகத்தின் அனைத்து வர்க்கங்களும் இந்த நேரத்தில் ஒன்றுபட்டிருப்பது போல் மேற்பரப்பில் தோன்றலாம். ஆனால், கூர்ந்து பார்த்தால், தொழிலாளி வர்க்கத்தின் நலன்களுக்கும் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்கும் இடையே ஒரு கடுமையான மோதல் இருப்பதைக் காணலாம். ஊரடங்கு தொடங்கியதிலிருந்தே, தொழிலாளர்கள் தங்கள் உயிர்களையும் அவர்களின் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றுவது குறித்து

Continue reading

கொரோனா வைரசு ஊரடங்கு நிலையில் அரசு மருத்துவமனை மருத்துவர்களுடைய நிலைமை

தற்போதுள்ள கொரோனா வைரசு (கோவிட் -19) நிலைமை குறித்தும், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் நிலைமைகள் குறித்தும் தொழிலாளர் ஒற்றுமைக் குரல் (தொ.ஒ.கு), தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் (டி.என்.ஜி.டி.ஏ) தலைவர் டாக்டர் கே. செந்திலோடு உரையாடியது. தொ.ஒ.கு : அன்புள்ள டாக்டர் செந்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரசு தாக்கத்தின் தற்போதைய நிலையை அறிய விரும்புகிறோம். டாக்டர் செந்தில் : உலகின் பல்வேறு நோய்களில், கோவிட்-19 (கொரோனா வைரசு) மிக அதிகமாக

Continue reading

அரசு மருத்துவமனைகளில் தூய்மைத் தொழிலாளர்களின் நிலை

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் வேலை செய்யும் தூய்மை மற்றும் துணைத் தொழிலாளர்களுடைய நிலைமை குறித்து தோழர் தா சிவக்குமாரோடு தொழிலாளர் ஒற்றுமைக் குரல் ஒர் நேர்முகம் கண்டது. தோழர் தா சிவக்குமார், இந்திய தொழிற்சங்கங்களின் மைய அமைப்பில் (COITU) இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு மருத்துவமனை உதவிப் பணிகள் தொழிலாளர்கள் சங்கத்தின் (T சட்ட அறிவுரையாளர் ஆவார். அந்த நேர்முகத்தின் சுருக்கம் பின்வருமாறு – தொழிலாளர் ஒற்றுமைக் குரல் (தொ.ஒ.கு) :

Continue reading

எவ்வித சுரண்டலும் ஒடுக்குமுறையும் இல்லாத ஒரு இந்தியாவிற்காக ஒன்றுபட்டுப் போராடுவோம்!

இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி – மத்தியக் குழுவின் அறைகூவல் மே 1, 2020 தொழிலாளர் தோழர்களே, அனைத்து நாடுகளின் தொழிலாளர்களை, குறிப்பாக உலகளாவிய நெருக்கடியின் மத்தியில் தங்களுடைய சொந்த உயிருக்கே நேரும் பெரும் ஆபத்தையும் பொருட்படுத்தாமல், சுகாதார மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருபவர்களை, 2020 மே தினத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி வணங்குகிறது. நம் நாட்டில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள்,

Continue reading