முதலாளித்துவ பேராசையும் சமூகத் தேவையும்

தேசிய சொத்துக்களும், பொது சேவைகளும் தனியார் மயமாக்கப்படுவதை தொழிலாளர்கள் எதிர்க்கின்றனர், ஏனெனில் இது சமூகத்தின் பொதுவான நலன்களுக்கு எதிரானதாகும். இது சமூகத் தேவைகளை நிறைவேற்றுவதை விட்டுக் கொடுத்து, அதிகபட்ச இலாபத்திற்கான ஏகபோக முதலாளிகளின் பேராசையை நிறைவேற்றுவதற்காக அவர்களுடைய குறுகிய நலன்களுக்கு உதவுகிறது. பொதுச் சொத்துக்கள் மற்றும் சேவைகளை தனியார் மயமாக்குவதற்கு எதிராக நமது நாட்டில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கக் கூட்டமைப்புகளில் உள்ள வேறுபாடுகள்

Continue reading

விலைவாசி உயர்வுக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதலைக் கண்டிப்போம்

நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி மற்றும் வேலையின்மைக்கு எதிராக மே 30ஆம் தேதி, தில்லி ஓக்லாவில் இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை ஆகிய கட்சிகள் கூட்டாக போராட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர். இந்த ஆர்பாட்டம் சகீன் பாக்கில் நடைபெற்றது. விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிரான கூட்டுப் போராட்டம் என்ற பெயரில் ஒன்றிணைந்த போராட்டக்காரர்கள்

Continue reading

மின்சார உற்பத்தி நெருக்கடியும் அதன் உண்மையான காரணமும்

தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய அனல் மின் நிலையங்களுக்குப் போதுமான நிலக்கரி இல்லாததால் நாட்டின் பெரும் பகுதிகள் கடுமையான மின் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன. இந்த மின் பற்றாக்குறைக்கு என்ன காரணம் என்பது பற்றி ஏகபோகக் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் குழப்பத்தை உருவாக்குகின்றன. பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) போதுமான நிலக்கரியை உற்பத்தி செய்யவில்லை என்றும், இந்திய இரயில்வே அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியை விரைவாக கொண்டு

Continue reading

இலங்கையின் மிகவும் பயங்கரமான சூழ்நிலைக்கு காரணிகள்

இந்தியாவின் தெற்கிலுள்ள அண்டை நாடான இலங்கைத் தீவு நாடு, இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான அனைத்துப் பக்க நெருக்கடியை சந்தித்து வருகிறது. உணவு, எரிபொருள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு அங்கு சமீப மாதங்களில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல அத்தியாவசிய மக்கள் நுகர் பொருட்களை கிடைக்கச் செய்வதற்கு இலங்கை இறக்குமதியை சார்ந்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து அவற்றை வாங்குவதற்கு அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக கோடிக்கணக்கான மக்கள் அடிப்படைத் தேவைகள்

Continue reading

தோழர் வில்சன் அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம்

அண்மையில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சியின் தோழர் வில்சன் அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் நெகிழ்ச்சியான நினைவலைகளோடும், போராட்ட உணர்வோடும் கன்னியாகுமரி புத்தன் சந்தையில் மே 28 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் தோழர்களும், சிபிஐ(எம்) உட்பட பல்வேறு கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் பிற கட்சித் தோழர்களும், தொழிலாளர்களும், நண்பர்களும் பங்கேற்றனர். கூட்டத்திற்கு தோழர் ஆப்ரகாம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் தூத்துக்குடி

Continue reading

ஆம்பூர் தொழிலாளர்களின் மே நாள் ஆர்பாட்டம்

தமிழ்நாடு தொழிற்சங்க நடுவம், ஆம்பூரில் மே 7 அன்று மே நாள் கூட்டத்தையும், கோருரிமை ஆர்பாட்டத்தையும் நடத்தியது. ஆம்பூர் சுற்றுவட்டாரத்திலுள்ள தோல், காலணிகள் மற்றும் தோல் தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்யும் பல்வேறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் இந்த மே நாள் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.     மே நாள் ஆர்பாட்டத்தைத் தோழர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கி நடத்தினார். தமிழ்நாடு தொழிற்சங்க நடுவத்தின் பொதுச் செயலாளர் தோழர்

Continue reading

தொழிலாளர் ஒற்றுமையை கட்டி வலுப்படுத்த மே-தினத்தில் உறுதியேற்பு

சென்னை மாநகரத்திலும் அதனைச் சுற்றியுள்ள பல தொழிற்சாலைப் பகுதிகளிலும் உள்ள தொழிலாளிகள் தத்தம் தொழிற்சாலை நுழைவாயில்களில் உற்சாகமாக செவ்வண்ணக் கொடிகளை ஏற்றியும் மே தின கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தியும் மே தின உறுதிமொழிகளை ஏற்றனர். வி.எச்.எஸ் மருத்துவமனை வளாகத்தின் நுழைவாயில் உற்சாகமான தொழிற்சங்க செயற்பாட்டாளர்களால் காலை ஏழரை மணிக்கு செவ்வண்ண கொடிகளை கொண்டு அலங்கரிக்கப்படிருந்தது. மேதின விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை வி.எச்.எஸ் மருத்துவமனை தொழிற்சங்கத்தின்  தலைவர் தோழர் இராமகிருஷ்ணனும்,

Continue reading

கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் போடும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போர்க்கொடி

கீழ் பவானி திட்ட கால்வாய், பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்படுள்ள பவானிசாகர் அணையிலிருந்து செல்லும் 200 கிமீ நீளமுடைய பாசன வாய்க்காலாகும். இதனால் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்கள் பயன் பெறுகின்றன. இக்கால்வாயின் மூலம் 2.07 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஒரு பகுதி நிலம் நேரடிப்பாசனம் பெறும்போது, கால்வாய்க்கு அருகிலுள்ள மற்ற பாசன நிலங்களுக்கும் நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மூலமாக அங்குள்ள கிணறுகளுக்கு நீர்

Continue reading

தீவிரமடைந்து வரும் தொழிலாளர் பிரச்சனைகள்

தீவிரமடைந்து வரும் தொழிலாளர் பிரச்சனைகள் குறித்து தொழிலாளர் ஒற்றுமை இயக்கம்  (தொ.ஒ.இ), சனவரி இறுதியில் ஒரு இணையவழிக் கூட்டத்தை நடத்தினர். இதில் வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவர்கள் பங்கேற்று தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து உரையாற்றினர். கூட்டத்தில் இணைந்திருந்த தொழிற் சங்கத் தலைவர்களையும், தொழிலாளர்களையும் மற்றவர்களையும் தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் தோழர் பாஸ்கர் வரவேற்றார். அவர் தன்னுடைய துவக்க உரையில் தொழிலாளர் ஒற்றுமை

Continue reading

குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக்கக் கோரி ஆர்பாட்டங்கள்

இந்தியாவெங்கிலும் உள்ள 500-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் ஒன்று கூடி செயல்பட்டு வரும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி, குறைந்தபட்ச ஆதரவு விலை (கு.ஆ.வி)யை சட்டமாக்கக் கோரி நாடு தழுவிய ஆர்பாட்டங்களை ஏப்ரல் 11 – 17 நாட்களில் நடத்த வேண்டுமென அழைப்பு விடுத்திருந்தது. இதையொட்டி தமிழ் நாடெங்கிலும் பல்வேறு ஆர்பாட்டங்களும், தெரு முனைக் கூட்டங்களும், கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன. இந்த ஆர்பாட்டங்களில் பல்வேறு விவசாய சங்கங்களும், பொது நல அமைப்புக்களும் ஆர்வத்தோடு

Continue reading