குர்கான் தொழிலாளர்களுடைய மாபெரும் பேரணி, அரியானா அரசாங்கம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய உரிமைகள் மீது நடத்திவரும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறது

ஆகஸ்டு 17, 2012 அன்று நடைபெற்ற ஆயிரக்கணக்கான குர்கான் தொழிற்பேட்டையைச் சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்ற ஒரு வீரமான பேரணி நகரத்தின் நெரிசலான பகுதிகள் வழியாக அணிவகுத்துச் சென்றது. பிற்பகல் 3 மணிக்கு தங்களுடைய வேலை முடிவுற்றவுடன் தத்தம் தொழிற்சாலைகளிலிருந்து தொழிலாளர்கள் கௌசாலா மைதானத்திற்கு வந்து சேர்ந்தனர்.

Continue reading

எப்பொழுதும் அதிகரித்துவரும் சுரண்டலினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் – வாகனத்துறை தொழிலாளர்கள்

இந்தியாவில் வாகனத் (ஆட்டோமொபைல்) துறை ஒரு வேகமாக வளர்ந்து வரும் துறையாக இருந்து வருகிறது. அதில் நமது நாட்டின் பெரிய முதலாளிகளும் வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

Continue reading

கூடங்குளம்அணுமின் திட்டத்தை எதிர்க்கும் மக்கள் மீது அரசு நடத்திவரும் பாசிச தாக்குதல்களை கண்டிப்போம்!

கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராடுகின்ற மக்கள் மீது அரசு பாசிசத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசின் இந்த காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்களைக் கண்டித்து மக்களாட்சி இயக்கம், தமிழ்நாடு, செப்டெம்பர் மாதத்தில் வெளியிட்ட அறிக்கையை கீழே வெளியிடுகிறோம்.

 

Continue reading

மாருதி சுசுகி தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள போலீசு பயங்கரவாதத்தை கண்டிப்போம்!

தொழிற்சங்கங்கள் அமைக்கவும், கடுமையான சுரண்டலை எதிர்க்கவும் தொழிலாளர்களுடைய உரிமைகளைப் பாதுகாக்க ஒன்றிணைவோம்!

Continue reading

கொலைகாரர்களோடு கூட்டாளிகளாகச் செயல்படும் இந்திய அரசை கண்டிப்போம்!

போபாலில் கொட்டப்பட்ட நச்சுக் கழிவுகள் உருவாக்கிய பாதிப்புகளுக்கு, அமெரிக்க நிறுவனமாகிய யூனியன் கார்பைடு கார்பரேசனும், அப்போது அதனுடைய தலைவனாக இருந்த வாரன் ஆண்டர்சனும் பொறுப்பல்ல என அமெரிக்க மத்திய நீதி மன்றம் சூன் 26 அன்று தீர்ப்பளித்திருக்கிறது. மேலும் அந்த நச்சுக் கழிவுகளையும் சுற்றுப்புறத்தையும் தூய்மைப்படுத்துமாறு அவர்களைக் கேட்கவும் முடியாதென நீதி மன்றம் கூறியிருக்கிறது.

Continue reading

தற்போதைய சூழ்நிலைமை, ஏர் இந்தியாவின் அனைத்துத் தொழிலாளர்களின் ஒற்றுமையைக் கோருகிறது.

தில்லி உயர் நீதி மன்றத்தின் தலையீட்டுக்குப் பின்னர் ஏர் இந்தியா விமானிகளுடைய வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

Continue reading

பாகிஸ்தான் வழியாக நேட்டோவுக்கான பொருள் போக்குவரத்து பாதைகளை மீண்டும் திறந்துவிட்டதற்கு எதிராக பாகிஸ்தானில் எதிர்ப்புக்கள் வலுத்துள்ளன

கடந்த வாரம், பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு நேட்டோவுக்கான பொருள் போக்குவரத்து பாதைகளை மீண்டும் திறந்துவிட்டதற்கு பாகிஸ்தானில் பெரும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன. கடந்த நவம்பரில் சலாலா விமான தளம் மீது அமெரிக்க ஏவுகணை தாக்குதல் தொடுத்ததினால் 24 பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். அதன் பின், பாகிஸ்தானில் இருந்த இந்தப் பொருள் போக்குவரத்து பாதைகள் மூடப்பட்டன.

Continue reading

நெருக்கடியில் ஏர் இந்தியா

ஏர் இந்தியா மாறி மாறி நெருக்கடியில் சிக்கி வருகிறது. இந்த நெருக்கடிகளின் சுமையை ஏர் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளிகள் தான் சுமக்க வேண்டியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக, 40,000 ஏர் இந்தியத் தொழிலாளர்களுக்கு ஊதியம் தாமதமாகக் கொடுக்கப்பட்டு வருகிறது. மார்ச் 2012 க்கான ஊதியம் சூனில் தான் கொடுக்கப்பட்டது.

Continue reading

பொது மக்களுக்கு வினியோகிப்பதற்கு பதிலாக கோதுமையை ஏற்றுமதி செய்யும் முடிவைக் கண்டிப்பீர்

தன்னிடம் கையிருப்பில் உள்ள இருபது இலட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்வதென உணவுத்துறை அமைச்சகம் முன்வைத்த ஒரு தீர்மானத்தை பொருளாதார செயல்பாடுகள் குறித்த அமைச்சர் குழு சூலை 2-ஆம் தேதியன்று ஏற்றுக் கொண்டது. இந்திய அரசின் மக்களுக்கு விரோதமான இந்தத் தீர்மானத்தை தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் கண்டிக்கிறது.

Continue reading

கேப்டன் இலட்சுமி சிகல் அவர்களுடைய மறைவுக்கு இரங்கல்

கேப்டன் இலட்சுமி சிகல் தன்னுடைய 97-ஆவது வயதில், சூலை 22, 2012 அன்று இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்கு தொழிலாளர் ஒற்றுமைக் குரல் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

Continue reading