27 செப்டம்பர் பாரத் பந்திற்கு முழுமனதோடு ஆதரவளிப்போம்!

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் அறிக்கை – செப்டம்பர் 8, 2021 விவசாய சங்கங்களின் ஐக்கிய முன்னணியாகிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா 27 செப்டம்பர் 2021 அன்று அனைத்திந்திய முழு கதவடைப்பை – பாரத் பந்த் நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறது. பாராளுமன்றம் அங்கீகரித்த 3 விவசாய விரோத சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து ஓராண்டு நிறைவடைந்ததை அந்த நாள் குறிக்கிறது. தில்லியின் எல்லைகளில் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை விவசாயிகள்

Continue reading

கர்னாலில் விவசாய போராளிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலைக் கண்டனம் செய்வோம்

ஆகஸ்ட் 28 அன்று அரியானாவிலுள்ள கர்னாலுக்கு அருகிலுள்ள பாஸ்தாரா சுங்கச்சாவடியில், அரசின் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியிருக்கிறது. அரியானா முதல்வர் உரையாற்றும் ஒரு மாநில அரசு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க கர்னாலை நோக்கிச் சென்ற விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியிருக்கின்றனர். காவல்துறை விவசாயிகளை கொடூரமாக தாக்கியதையடுத்து விவசாயிகள் நெடுஞ்சாலைகளை தடுத்து மறியலில் ஈடுபட்டனர். தடியடியில் பல விவசாயிகள் மிகவும் மோசமாக

Continue reading

விவசாயிகளுடைய போராட்டத்திற்கு ஆதரவாக லண்டனில் போர்முக பேரணி!

ஆகஸ்ட் 15 அன்று லண்டன், பிரிட்டனில் நடைபெற்ற ஒரு போர்க்குணமிக்க ஒரு பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இந்தியாவில் நடைபெற்றுவரும் விவசாயிகளுடைய போராட்டத்திற்கு பிரிட்டனில் உள்ள இந்தியத் தொழிலாளர்களும் மாணவர்களும் தங்களுடைய ஆதரவைத் தெரிவிப்பதற்காக இந்த ஆர்பாட்டப் பேரணி  ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இதில் இந்திய தொழிலாளர் அசோசியேசன் (கிரேட் பிரிட்டன்) மற்றும் பல்வேறு அமைப்புகள் பங்கேற்றன. ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்னே திரண்டனர். கூட்டத்தில் பெரும்

Continue reading

பணிநீக்க உத்தரவை எதிர்த்து ஏர் இந்தியா விமானிகள் வெற்றி

பல நிரந்தர மற்றும் ஒப்பந்த விமானிகளை வேலையிலிருந்து நீக்கும் ஏர் இந்தியாவின் ஆணையை டெல்லி உயர் நீதிமன்றம் 2021 ஜூன் 2021 அன்று ரத்து செய்து அவர்களை மீண்டும் வேலையில் அமர்த்தியதோடு, வேலையிலிருந்து நீக்கப்பட்ட காலத்திற்கும் முழு ஊதியத்தைக் கொடுக்குமாறு ஆணையிட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில், கொரோனா நெருக்கடியால் விமானப் பயணங்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதையும், நிதி நெருக்கடியையும் காட்டி, ஏர் இந்தியா நிர்வாகம் அதன் 60

Continue reading

சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளின் அதிகரித்துவரும் விலைகள்

ஏகபோக முதலாளித்துவ பேராசையை நிறைவேற்ற மக்கள் கொள்ளை அடிக்கப்படுகிறார்கள் கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பாமாயில் ஆகிய சமையல் எண்ணெய்களின் விலைகள் கடந்த ஒரு வருடத்தில் அனைத்திந்திய அளவில் 20% முதல் 60% வரை உயர்ந்துள்ளன. கடந்த மே 2021 இல் சமையல் எண்ணெய்களின் விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தன. கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசலின்

Continue reading

டைமண்ட் நிர்வாகமே, தொழிலாளர்களைத் தாக்குவதை நிறுத்து!

சென்னையிலுள்ள டைமண்ட் இஞ்சினீரிங் தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்கள் மீது நடத்திவரும் தாக்குதல்களைக் கண்டித்து தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு – டைமண்ட் நிர்வாகமே, தொழிலாளர்களைத் தாக்குவதை நிறுத்து! தொழிலாளர் தோழர்களே, சென்னையிலுள்ள டைமண்ட் இஞ்சினீரிங் தொழிற்சாலை நிர்வாகம், தொழிலாளர்களுடைய அடிப்படை உரிமைகளைக் கூட மதிக்காமல் அவர்களைப் பல வழிகளிலும் தாக்கி வருகிறது. கொரோனா பெருந் தொற்று நோய் நிலவும் இந்த மோசமான நேரத்திலும் கூட, தொழிலாளர்களை

Continue reading

தனியார்மயமாக்கலை எதிர்த்து ரயில் ஓட்டுநர்கள் சூலை 15 ஐ கருப்பு தினமாகக் கடைபிடித்தனர்

2021 சூலை 15 ஆம் தேதியன்று, அகில இந்திய லோகோ ரன்னிங் ஸ்டாஃப் அசோசியேஷன் (ஏஐஎல்ஆர்எஸ்ஏ) கீழ் இந்திய ரயில்வே ஓட்டுநர்கள் நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர். பனாரஸ், ​​கோரக்பூர், மவு, சாப்ரா, லக்னோ, பேரேலி, அலகாபாத், ஹாஜிபூர், சோன்பூர், முசாபர்பூர் மற்றும் பாராயுனி என ரயில்வேயின் பல்வேறு டிவிசன்களின் இரயில் நிலைய வளாகங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. பல இடங்களில், ரயில்வே நடைமேடைகளில் ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. பெண்கள் ரயில்வே

Continue reading

விவசாயி விரோத சட்டங்களுக்கு எதிராக அரியானாவில் விவசாயிகள் ஆர்பாட்டம்

மூன்று விவசாயி விரோத சட்டங்களை இரத்து செய்யக் கோரி நடந்து வரும் விவசாயிகளுடைய போராட்டத்தின் ஒரு பகுதியாக, அரியானா விவசாயிகள் சூலை 11 அன்று மாநிலம் முழுவதும் பல எதிர்ப்பு ஆர்பாட்டங்களை நடத்தினர். தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக மாநில அரசு நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் எதிர்ப்பைத் தெரிவிப்பதென முடிவெடுத்திருப்பதாக விவசாயிகள் அறிவித்தனர். சிர்சா மாவட்டத்தில், அரியானா சட்டமன்றத் துணைத் தலைவர் ரன்பீர் சிங் கங்வாவை முற்றுகையிட்டு விவசாயிகள் தங்கள் எதிர்ப்பைத்

Continue reading

அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் அவசர சட்டம் 2021 க்கு எதிராக இந்தியா முழுவதும் ஆர்பாட்டங்கள்

அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் அவசரச் சட்டம் (EDSO) 2021-க்கு எதிராக சூலை 23 ஆம் தேதி அன்று தொழிற்சங்கங்களும் தொழிலாளர் அமைப்புகளும் நாடடெங்கிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். சூலை 23, 2021 அன்று புது தில்லியில் இடிஎஸ்ஓ-விற்கு எதிராக நடைபெற்ற ஆர்பாட்டம் இராணுவத் தளவாடங்கள் தொழிற்சாலை வாரியத்தை (OFB) நிறுவனமயப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராக, பாதுகாப்புத் துறை ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, சூன் 30 அன்று அத்தியாவசிய பாதுகாப்பு

Continue reading

பாதுகாப்புத் தொழிலாளர்களின் உரிமைகள் மீது ஒன்றிய அரசின் தாக்குதலைக் கண்டிப்போம்!

இராணுவ தளவாடத் தொழிற்சாலை வாரியத்தை (OFB) அகற்றிவிட்டு அதை 7 நிறுவனங்களாக மாற்றும் மத்திய அரசாங்கத்தின் முடிவை கூட்டாக எதிர்ப்பதென பாதுகாப்புத் துறை ஊழியர்கள் தீர்மானித்திருப்பதை நமது கட்சியின் இணைய தளத்தில் சூன் 25 இல் வெளியிட்டிருந்தோம். சூன் 27 நடைபெற்ற கூட்டமைப்பின் விரிவுபடுத்தப்பட்ட கூட்டத்தில், சூலை 26 லிருந்து தொடங்கி காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்துவது குறித்த அறிவிப்பை உரிய அதிகாரிகளிடம் கொடுப்பதென முடிவெடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு கூட, பாதுகாப்பு

Continue reading