உண்மையான நோக்கங்களும், பொய்யான பரப்புரைகளும் அம்பலம் நவம்பர் 8, 2016 அன்று பிரதமர் மோடி அறிவித்த பண மதிப்பு நீக்கத்தை நியாயப்படுத்துவதற்காக கூறப்பட்ட பொய்யான காரணங்கள், 5 ஆண்டுகளுக்கு பிறகு, முற்றிலும் வெட்ட வெளிச்சமாகியுள்ளன. அந்த நடவடிக்கையின் உண்மையான நோக்கங்களும் தெளிவாகி உள்ளன. ஒரே அடியாக, புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் 86% (அனைத்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளும்) நீக்கப்படுவதாக 2016 நவம்பர் 8 ஆம்
Continue readingAuthor: tamiladmin
மூன்று விவசாயச் சட்டங்கள் இரத்து :
ஆளும் வர்க்கத்தின் சதித் திட்டம் குறித்து எச்சரிக்கை தேவை! இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி மத்தியக் குழுவின் அறிக்கை – 22 நவம்பர், 2021 ஒரு பெரிய அரசியல் மேதையின் தோரணையில், மூன்று விவசாய சட்டங்கள் விரைவில் நீக்கப்படும் என்று நவம்பர் 19 அன்று பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இந்த மூன்று சட்டங்களின் நன்மைகள் குறித்து சில விவசாயிகளை ஏற்றுக் கொள்ள வைக்க முடியாமல் போனதற்காக, அவர் நாட்டு மக்களிடம்
Continue reading
விவசாயிகள் போராட்டம் எதிர் கொள்ளும் கேள்விகள் குறித்து
இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் லால் சிங் அவர்கள் தொழிலாளர் ஒற்றுமைக் குரலுக்கு அளித்த நேர்முகம் தொழிலாளர் ஒற்றுமைக் குரல் (தொ.ஒ.கு) : கடந்த 11 மாதங்களுக்கும் மேலாக பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தில்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தோழரே, விவசாயிகள் போராட்டம் குறித்து உங்களுடைய மதிப்பீடு என்ன? லால் சிங் : இந்த இயக்கத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், நாடெங்கிலும் உள்ள ஏழை
Continue reading
மகத்தான அக்டோபர் சோசலிசப் புரட்சியின் 104-வது ஆண்டுவிழா
சோசலிசம் மட்டுமே முதலாளித்துவ-ஏகாதிபத்திய அமைப்புக்கு உண்மையான மாற்று 21-ஆம் நூற்றாண்டின் 20-களின் துவக்கம், கொரோனா வைரசு தொற்றுநோயாலும், மீண்டும் மீண்டும் கொண்டு வரப்பட்ட பொருளாதார செயல்பாட்டின் பொது முடக்கத்தாலும் மனித சமூகம் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியில் தள்ளப்பட்டு இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டமும், கடன் சுமையும், வறுமையும் முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளன. பெரும்பான்மையான மக்கள் சொல்லொணாத் துன்பங்களை சந்தித்து வந்த அதே நேரத்தில், உலகின் பணக்கார கோடீஸ்வரர்கள் முன்னெப்போதையும் விட
Continue reading
ஏர் இந்தியா தனியார்மயம் – அதிகபட்ச லாபத்திற்கான ஏகபோக முதலாளித்துவ பேராசையை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்ட தொழிலாளர் விரோத, மக்கள் விரோதச் செயல்
டாடா குழுமத்திற்கு விற்கப்பட்டுள்ள ஏர் இந்தியாவும், அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸும் கூட்டாக 94 விமானங்களைச் சொந்தமாக வைத்துள்ளன. அவை 100 உள்நாட்டிற்கும், 60 சர்வதேச இடங்களுக்கும் சேவை செய்கின்றன. டாடாக்கள் வெறும் 18,000 கோடி ரூபாய் (சுமார் 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) மட்டுமே கொடுத்து ஏலத்தை எடுத்துள்ளனர். இந்த தொகையில் 15 சதவீதத்தை, ரூ 2700 கோடியை, அவர்கள் இந்திய அரசுக்குச். செலுத்த வேண்டும்.
Continue readingதோழர் தங்கசாமி வில்சன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்
நமது அன்புக்குரிய தோழர் தங்கசாமி வில்சன், 2021 அக்டோபர் 20 ஆம் தேதி இயற்கை எய்தியதை பெருந் துயரத்தோடு இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சியின் மத்தியக் குழு அறிவிக்கிறது. தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தொழிலாளி வர்க்கக் குடும்பத்தில் பிறந்த தோழர் வில்சன் சிறுவயதிலிருந்தே கம்யூனிச கொள்கைகளின் பால் ஈர்க்கப்பட்டார். கட்சி மற்றும் அதன் கொள்கையின் மீது அவருக்கு இருந்த முழு நம்பிக்கையை எதனாலும் அசைக்க முடியவில்லை. அவர் உழைக்கும்
Continue reading
அன்புத் தோழர் வில்சனுக்கு செவ்வணக்கம்!
இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் பொதுச் செயலாளர் – தோழர் லால் சிங்கின் இரங்கல் செய்தி : தோழர்களே, நம்முடைய அன்பிற்குரிய தோழர் டி வில்சன் 20-10-2021 அன்று மறைந்துவிட்டார் என்ற மிகவும் துயரமான செய்தி நேற்று எங்களுக்குக் கிடைத்தது. இளமையான தனது 57 வது வயதில், குணப்படுத்த முடியாத ஒரு கொடிய நோயை எதிர்த்து அவர் ஒரு நீண்ட தீரமான போராட்டம் நடத்திய போதிலும், இறுதியில் அவரை நேசிக்கும்
Continue readingஅதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் விவசாயிகளின் மோசமான நிலையை வெளிப்படுத்துகின்றன
பல நூற்றாண்டுகளாக விவசாயம் சமுதாயத்தின் முதுகெலும்பாக கருதப்பட்டு வந்தாலும், அதில் ஈடுபட்டு வருபவர்களுக்கு இப்போதெல்லாம் அது போதுமான வருவாயைக் கொடுப்பதில்லை. 2021 செப்டம்பர் 10-இல், தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள நிலைமை மதிப்பீட்டு களஆய்வு (எஸ்ஏஎஸ்), நாட்டின் விவசாயிகளின் பொருளாதார நிலைமைகள் குறித்த மிக விரிவான அதிகாரப்பூர்வ ஆய்வறிக்கையாகும். 2019 இல் நடத்தப்பட்ட இந்த களஆய்வு, சூலை 2018 முதல் சூன் 2019 வரை 12 மாத காலத்திற்கு புள்ளிவிவரங்களை
Continue reading
தமிழ்நாட்டில் வாகன உற்பத்தித் தொழிலாளர்கள் மோசமான வாழ்வாதார பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்
இந்த ஆண்டு செப்டம்பரில், ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டிலுள்ள தனது உற்பத்தி தொழிற்சாலையை மூடப்போவதாக அறிவித்தது. இதனால், கிட்டத்தட்ட 4,000 நிரந்தரத் தொழிலாளர்களும் சுமார் 40,000 ஒப்பந்த அல்லது தற்காலிக தொழிலாளர்களும் வேலையிழப்பார்கள். ஃபோர்டுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதிரி பாகங்களை உற்பத்தி செய்து கொடுக்கும் 75 பெரிய நிறுவனங்களும், 200 க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களும் மூடப்படும் அபாயம் உள்ளது. சென்னையிலுள்ள ஃபோர்டு தொழிற்சாலை மூடப்படுவதை எதிர்த்து
Continue reading
உத்திர பிரதேசத்திலும், அரியானாவிலும் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலைக் கண்டிப்போம்!
அக்டோபர் 3 ம் தேதி, உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் அந்த மாநில துணை முதலமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் மீது அமைச்சரின் வாகனங்கள் வேண்டுமென்றே மோதியதில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். அமைச்சரோடு வந்தவர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த விவசாயிகள் மீது துப்பாக்கியால் சுட்டதால் மேலும் பலர் காயமடைந்தனர். அந்த வாகனங்களை முன்னணியில் வழி நடத்திச் சென்ற
Continue reading