இந்தியா கேட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் நிருபர் அறிக்கை மல்யுத்த வீரர்களுக்கு நீதி கோரி மே 23 அன்று மாலை ஜந்தர் மந்தரில் இருந்து இந்தியா கேட் வரை நடந்த மெழுகுவர்த்தி ஏந்திய போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ஏப்ரல் 23 ஆம் தேதி தில்லி – ஜந்தர் மந்தரில் தொடங்கிய மல்யுத்த வீரர்களின் போராட்டம் ஒரு மாதம் காலம் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் இந்தப் பேரணி நடைபெற்றது. இந்திய மல்யுத்த

Continue reading

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் மக்கள் திரள் ஆர்பாட்டங்கள்

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் நிருபர் அறிக்கை மே 16-21 முதல், தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் (எம்இசி) பல்வேறு தொழிற் பேட்டைப் பகுதிகள், தொழிலாளர்கள் குடியிருப்புக்கள் மற்றும் தில்லி மெட்ரோ இரயில் நிலையங்களில் தொடர்ச்சியாக மக்கள் திரள் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து நடத்தியது. ஒவ்வொரு மாலையிலும், தெற்கு தில்லியில் உள்ள ஓக்லா தொழிற்பேட்டை பகுதி 1 மற்றும் 2 இல் உள்ள முக்கிய இடங்களில் தெரு முனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தக்

Continue reading

உலகம் முழுவதும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் தொழிலாளர்களுக்கு வீரவணக்கம்!

உலகெங்கிலும் தொழிலாளர்களின் மே நாள் பேரணிகளும், அணிவகுப்புகளும் உலகெங்கிலும் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகள் மீது முதலாளிகளும், அரசாங்கங்களும் நடத்தும் தாக்குதல்களுக்கு எதிராக மாபெரும் பேரணிகளை நடத்தினர். உலகின் பல நாடுகளில் உள்ள இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் இந்த மே நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். பல நாடுகளில் இந்தப் பேரணிகளை கட்டுப்படுத்தவும், அவற்றை அரங்கத்திற்குள் அடைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அப்படிப்பட்ட அனைத்துத் தடைகளையும் மீறி, தொழிலாளர்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தும்

Continue reading

கர்நாடக தேர்தல்கள் 2023

மாற்றம் என்ற மாயை கர்நாடகாவில் உள்ள தொழிலாளர்களும் விவசாயிகளும் தங்கள் வாழ்க்கை நிலைமைகளில் மாற்றம் வரவேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், கர்நாடக சட்டமன்றத் தேர்தல்கள் 2023 மே மாதத்தில் நடைபெற்றன. இந்தத் தேர்தலின் விளைவாக பாஜக தலைமையிலான அரசாங்கத்திற்கு பதிலாக காங்கிரசு கட்சி ஆட்சி அமைத்துள்ளது. இதை ஒரு பெரிய மாற்றமாக செய்தி ஊடகங்களில் பேசப்படுகிறது. ஆனால், முதலாளி வர்க்கத்தின் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு செய்யப்படும் இத்தகைய

Continue reading

இந்தியாவெங்கும் மே நாள் பேரணிகள்:

தங்கள் உரிமைகள் தாக்கப்படுவதற்கு எதிராக நாடு முழுவதும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டம் தொழிலாளர் ஒற்றுமை இயக்க நிருபரின் அறிக்கை சர்வதேச தொழிலாளர் நாளான மே 1, 2023 அன்று நாடெங்கிலும் தொழிலாளர்கள் போராட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தினர். 1886 இல் சிகாகோவில் 8 மணி நேர வேலை நாள் உரிமைக்காகப் போராடியத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அவர்கள் வணக்கம் செலுத்தினர். தனியார்மயமாக்கல், ஒப்பந்தமயமாக்கல், தொழிலாளர் விரோத சட்டங்கள் மற்றும் கொள்கைகள் போன்ற

Continue reading

தமிழகத் தொழிலாளர்கள் மே நாளை பேரார்வத்தோடு கொண்டாடினர்

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் நிருபர் அறிக்கை 2023 ஆம் ஆண்டு மே முதல் நாள், இந்தியாவில் முதல் மே நாள் கொண்டாட்டத்தின் நூற்றாண்டைக் குறிக்கிறது. சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு, அப்போது மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட சென்னையில், தொழிலாளர்கள் செங்கொடியை ஏற்றினர். எனவே இந்த ஆண்டின் மே நாள் தொழிலாளர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது இந்திய தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளுக்காக, முதலில் காலனிய ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், சுதந்திரம்

Continue reading

மே நாள் தோற்றத்தின் வரலாறு

சர்வதேச உழைக்கும் மக்களுடைய நாளாகிய மே நாள், முதன்முதலில் 1890 மே முதல் தேதியன்று, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவெங்கும் ஊர்வலங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் கொண்டாடப்பட்டது. மே தினத்தின் தோற்றம், குறைந்த நேர வேலை நாளுக்கான போராட்டத்துடன் நெருக்கமாக இணைந்துள்ளது. இது தொழிலாளி வர்க்கத்திற்கான மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கோரிக்கையாகும். இந்தப் போராட்டம் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கிட்டத்தட்ட தொழிற்சாலை அமைப்பின் தொடக்கத்திலிருந்தே ஆரம்பித்தது.

Continue reading

சுரண்டல், ஒடுக்குமுறை இல்லாத சமுதாயத்திற்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்!

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் மே நாள் அறிக்கை, ஏப்ரல் 20, 2023 மே 1, 2023 அன்று, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள், நம்முடைய உரிமைகளுக்கான போராட்டத்தில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த அனைத்து தோழர்களின் நினைவிலிருந்து உத்வேகம் பெறுவார்கள். போர்க்குணமிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை எழுப்புவார்கள். எதிர்ப்புப் பேரணிகள் மூலம், முதலாளித்துவ சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அவர்கள் மீண்டும் உறுதி ஏற்பார்கள்.

Continue reading

12 மணி நேர வேலை நாளுக்கு பெரும் எதிர்ப்பு:

தொழிற்சாலை வேலை நேரத்தை நீட்டிக்கும் சட்டத் திருத்தத்தை நிறுத்தி வைக்க தமிழக அரசு நிர்பந்திக்கப்பட்டுள்ளது வேலை நாளினை 12 மணி நேரமாக அதிகரிக்கும் தொழிற்சாலைகள் சட்டத் (1948) திருத்தத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைப்பதற்கான தனது அரசாங்கத்தின் முடிவை ஏப்ரல் 24 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார். ஏப்ரல் 21ஆம் தேதி சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததை அடுத்து மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்தத்

Continue reading

தமிழக விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த கருத்தரங்கு:

விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்க போராட்ட ஒற்றுமையை வலுப்படுத்த தீர்மானம் தமிழகத்தின் தஞ்சாவூர் அருகே உள்ள அம்மாபேட்டையில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும், முன்னேற்றத்திற்கான வழிகள் குறித்தும் விவாதிப்பதற்காக ஒரு கருத்தரங்கம் மார்ச் 28 அன்று நடைபெற்றது. மானாவரி நிலங்களின் பாசனநீர்ப் பிரச்சனை, அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க வழியில்லாமல் இருப்பது மற்றும் வேளாண் விளை பொருட்களுக்கு தேவைப்படும் சேமிப்புக் கிடங்குகளும் பிற உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாதது

Continue reading