நாடெங்கிலுமிருந்து வீட்டு வேலைத் தொழிலாளர்கள் டெல்லி ஜந்தர்மந்தரில் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் நிருபர் அறிக்கை

2024 டிசம்பர் 12 அன்று வீட்டு வேலைத் தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்தை வீட்டு வேலை தொழிலாளர்களுக்கான தேசிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஆர்பாட்டத்தில் நாடெங்கிலுமிருந்து வந்திருந்த 500-க்கும் மேற்பட்ட வீட்டு வேலை தொழிலாளர்கள் பங்கேற்றனர். எல்லா தொழிலாளர்களும் அவர்களுடைய உரிமைகளையும் அவர்கள் தொழிலாளர்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் ஒருமனதாக கோரிக்கை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து தொழிலாளர் ஒற்றுமை இயக்கம், ஏ.ஐ.டி.யூ.சி, சேவா மற்றும் பல அமைப்புகள் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். மேலும் வீட்டு வேலைத் தொழிலாளர்களின் இந்த ஆர்பாட்டத்தை ஆதரித்து பல பாராளுமன்ற உறுப்பினர்களும் உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், வீட்டு வேலைத் தொழிலாளர்களுடைய போராட்டம் வாழ்க, நாங்கள் கண்ணியம், மதிப்பு மற்றும் எங்களுடைய கடுமையான உழைப்புக்கு அங்கீகாரம் கோருகிறோம், வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மற்றும் பிஃப் திட்டங்களைக் கொண்டு வா, வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்கு தொழிலாளர்கள் என்ற அங்கீகாரத்தை கொடு போன்ற கோரிக்கைத் தட்டிகளை வைத்திருந்தனர்.

பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த பிரதிநிதிகள் பாடிய பாடல்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களுடைய ஆர்வத்தை மேலும் தூண்டியது.

ஆர்ப்பாட்ட த்தில் உரையாற்றிய பேச்சாளர்கள், நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளில் வீட்டுவேலை தொழிலாளர்கள் பற்றிக் குறிப்பிடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினர். இஎஸ்ஐ அல்லது பிஎஃப் என எந்த வகையான சமூகப் பாதுகாப்பும் நமக்கு இல்லை. சமூகப் பாதுகாப்புக்கான தொகுப்பு சட்டத்தில் நமது ஊதியம் பற்றி எந்த வரையறையும் குறிப்பிடப்படவில்லை. எனவே நமக்காக தனிப்பட்ட ஒரு சட்டம் நம்முடைய உரிமைகளை உறுதிப்படுத்துகின்ற வகையில் இயற்றப்பட வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

தொழிலாளர்கள் என்ற அங்கீகாரத்தை அரசாங்கம் நமக்குக் கொடுக்குமானால், குறைந்தபட்ச ஊதியம் நமக்குக் கிடைக்கும் என்றனர். எனவே தொழிலாளர்கள் என்ற அங்கீகாரம் நமக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பது நமது கோரிக்கை. நமக்கு எந்த நலவாரியமும் இல்லை. வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்கு ஒரு வாரியம் அமைக்கப்பட்டு அதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது நம்முடைய கோரிக்கையாகும்.

சர்வதேச தொழிலாளர் யூனியன் கருத்தரங்கு 189 (வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்கு கண்ணியமான வேலை) என்பதை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டு பத்தாண்டுகளுக்கு மேல் ஆகின்றன என்று பேச்சாளர்கள் குறிப்பிட்டனர். இருந்துங்கூட நம்முடைய உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு எந்த ஒரு சட்டமும் இயற்றப்படவில்லை. வேலை செய்யும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கும் சட்டம் மற்றும் குறைந்தபட்ச ஊதிய அறிவிப்புகளில் வீட்டு வேலை தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டிருப்பது போன்ற சில முன்னேற்றங்கள் 13 மாநிலங்களில் ஏற்பட்டிருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் எதுவும் இல்லை. தொழிலாளர்கள் நமக்கு எந்த பாதுகாப்பும் இன்றி நாம் தொழிலாளர் சட்டங்களிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளோம்.

இறுதியாக வீட்டு வேலை தொழிலாளர்களுடைய பிரதிநிதிகள் குழு தங்களுடைய கோரிக்கை பட்டியலை மத்திய அரசாங்கத்திடம் சமர்ப்பித்தனர். கோரிக்கை மனுவில் பின்வரும் கோரிக்கைகள் அடங்கியுள்ளன. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கருத்தரங்கம் 189-ஐ இந்தியா அங்கீகரிப்பதற்கு, வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்கென ஒரு ஒருங்கிணைந்த சட்டமானது இயற்றப்பட வேண்டும். எல்லா வீட்டுவேலைத் தொழிலாளர்களும் தொழிலாளர் துறையில் பதிவு செய்யப்பட வேண்டும். வீட்டு வேலைத் தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதிய சட்டம், இஎஸ்ஐ மற்றும் பிஎஃப் ஆகியவற்றில் சேர்க்கப்பட வேண்டும்.  தொழிலாளர்கள் வேலை செய்யும் வீடுகள், வேலை செய்யும் இடங்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும். நகர்ப்புறங்களில் வீட்டுவேலை தொழிலாளர்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய வீடுகள் தரப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *