இந்தியா கேட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் நிருபர் அறிக்கை

மல்யுத்த வீரர்களுக்கு நீதி கோரி மே 23 அன்று மாலை ஜந்தர் மந்தரில் இருந்து இந்தியா கேட் வரை நடந்த மெழுகுவர்த்தி ஏந்திய போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ஏப்ரல் 23 ஆம் தேதி தில்லி – ஜந்தர் மந்தரில் தொடங்கிய மல்யுத்த வீரர்களின் போராட்டம் ஒரு மாதம் காலம் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் இந்தப் பேரணி நடைபெற்றது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். அவரை பதவியில் இருந்து நீக்கி, கைது செய்து தண்டிக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அமைப்புகளும், நூற்றுக்கணக்கான மக்களும் தினமும் போராட்ட களத்தில் போராட்டக்காரர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். மல்யுத்த வீரர்களுக்கு நீதி கோரியும், பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கக் கோரியும் மாபெரும் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மே 23 அன்று நடந்த மெழுகுவர்த்தி ஏந்திய ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும் முழக்கங்களைக் கொண்ட தட்டிகளை ஏந்தியிருந்தனர். மத்திய தில்லியில் உள்ள அசோகா சாலை மற்றும் ராஜ்பாத் எங்கும் எதிரொலித்த போராட்டக்காரர்களின் போர்க்குணமிக்க முழக்கங்களும், போராட்டத்தின் உற்சாகமான பாடல்களும் நீதிக்கான போராட்டத்தைத் தொடர்வதில் மக்களுடைய உறுதியை எடுத்துக்காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *