மத்திய அரசே, இரப்பர் வாரியத்தை மூடாதே!

தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை இரத்து செய்!

இந்தியாவில் இரப்பர் தொழிலை ஊக்குவிக்கவும், இரப்பர் பற்றிய ஆராய்ச்சிகள், பயிற்சிகள் மற்றும் இரப்பர் விவசாயிகளுக்கு இரப்பர் சாகுபடி தொடர்பான ஆலோசனைகள் வழங்குவதற்காகவும் 1947-ஆம் ஆண்டு இரப்பர் வாரியம் உருவாக்கப்பட்டது. இரப்பர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இரப்பர் பால் வெட்டும் பயிற்சி, இரப்பர் ஷீட் தயாரிப்பு பயிற்சி, தரம் பிரித்தல் பயிற்சி, தரத்தை மேம்படுத்த நடவடிக்கை, தொழில் நுட்ப உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட 22 வகையான திட்டங்கள் இரப்பர் வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 20 ஆயிரம் ஹக்டேர், கேரளாவில் 6 இலட்சம் ஹக்டேர் நிலப்பரப்பளவில் இரப்பர் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் இரப்பர் வாரியத்தை மூடுவதற்கு நிதி ஆயோக் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரப்பர் வாரியத்தை மூடவோ, அல்லது தனியாரிடம் வழங்கவோ செய்யலாமென பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பரிந்துரையைக் கண்டித்தும், மத்திய அரசு இரப்பர் வாரியத்தை மூடக் கூடாது என்று வலியுறுத்தியும் வருவதோடு, இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இத்திட்டத்தை இரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையைத் தொழிலாளர் ஒற்றுமைக் குரல் ஆதரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *