மின்சார திருத்த மசோதா 2022-க்கு எதிராக நாடு தழுவிய ஆர்பாட்டங்கள் அறிவிப்பு

மத்திய அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட வரைவு மின்சார திருத்த மசோதா 2022 குறித்து, மின்சாரப் பயனாளிகள் மற்றும் மின்சாரத் தொழிலாளர்களோடு விரிவாக பேச்சு வார்த்தை நடத்தாமல், மசோதாவை பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் முன்வைக்கக் கூடாதென ஆல் இந்தியா மின்சார பொறியாளர்கள் கூட்டமைப்பு, ஒன்றிய மின்சாரத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். மின்சாரப் பயனாளிகளுக்கும், மின்சாரத் தொழிலாளர்களுக்கும் கடுமையான பாதிப்புகளை உருவாக்கக் கூடிய இந்த திருத்த மசோதாவிற்கு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்குவதைத் தடுக்க தேவையான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென கோரி எல்லா மாநில மற்றும் ஒன்றிய பிரதேச முதலமைச்சர்களுக்கும் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். இந்த மசோதாவிற்கு எதிராக நாடு தழுவிய ஒரு போராட்டத்தை அறிவித்து சூலை 20 அன்று தில்லியில் மின்சார ஊழியர்கள் மற்றும் பொறியாளர்களுடைய தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நடைபெற்றது.

மின்சார திருத்த மசோதா 2022, மின்சார வினியோகம் முழுவதையும் தனியார்மயப்படுத்துவதற்கான ஒரு வரைவு என்று குறிப்பிட்ட அனைத்திந்திய மின்சார பொறியாளர்களுடைய கூட்டமைப்பு, இந்த மசோதாவை மின்சாரத் தொழிலாளர்கள் உறுதியாக எதிர்ப்பார்களென அறிவித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *