தேசிய பணமாக்கும் கொள்கைத் திட்டத்தின் ஒரு அங்கமாக, 160 நிலத்தடி சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்துவிட இந்திய அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.
ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் லிமிடட் இன் தொழிலாளர்கள் போராட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர்
இதோடு, ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் லிமி (ECL), பாரத் கோக் கோல் லிமி (BCCL) மற்றும் மத்திய சுரங்கங்களைத் திட்டமிடும் மற்றும் வடிவமைக்கும் கழகத்தின் (CMPDI) 25 சதவிகித பங்குகளை விற்பதென்ற தன் முடிவையும் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. மேலும் மத்திய சுரங்கங்களைத் திட்டமிடும் மற்றும் வடிவமைக்கும் கழகத்தை (CMPDI) மினரல் எக்ஸ்பிளரோசன் அன்டு கன்சன்டன்சி லிமிடட் (MECL) நிறுவனத்தோடு இணைக்கும் தன் தீர்மானத்தையும் அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
அரசாங்கத்தின் இந்த திட்டங்கள் மீது கோல் இந்தியா லிமிடட்(CIL) தொழிலாளர்கள் மிகவும் கோபத்தோடு உள்ளனர். இந்த தொழிலாளர் விரோதத் தாக்குதல்களை எதிர்ப்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர்.