விலைவாசி உயர்வுக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதலைக் கண்டிப்போம்

நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி மற்றும் வேலையின்மைக்கு எதிராக மே 30ஆம் தேதி, தில்லி ஓக்லாவில் இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை ஆகிய கட்சிகள் கூட்டாக போராட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர். இந்த ஆர்பாட்டம் சகீன் பாக்கில் நடைபெற்றது.

விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிரான கூட்டுப் போராட்டம் என்ற பெயரில் ஒன்றிணைந்த போராட்டக்காரர்கள் போர்க்குணமிக்க முழக்கங்களை எழுப்பினர்: வீழ்ச்சியடையும் வருமானம், கிடுகிடுவென உயர்ந்துவரும் விலைவாசி!, விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்து! ஏழைகளுக்கு எதிரான கொள்கைகளை திரும்பப் பெறு! வேலையின்மையை நிறுத்து! அனைவருக்கும் வேலை வழங்கு! உணவுப் பொருட்கள், சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகின்றன, மக்களின் வாழ்க்கை யைப் பரிதாபமாக்குகின்றன! மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி அரசியலை நிறுத்து! என்பன போன்ற முழக்கங்களைக் கொண்ட தட்டிகளைப் போராட்டக்காரர்கள் உயர்த்திப் பிடித்திருந்தனர்.

ஆர்பாட்ட இடத்தில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டம் தொடங்கியதுமே, போராட்டத்தை நிறுத்துமாறு காவல்துறை உத்தரவிட்டு, அரசியல் கட்சிகளின் முக்கிய செயற்பாட்டாளர்களைக் கைது செய்தனர். அதன் பிறகு அவர்கள் பல மணி நேரம் காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

மக்கள் போராட்டம் நடத்துவதற்கான உரிமை மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. முதலாளி வர்க்கம் மற்றும் அதன் அரசாங்கங்களின் அதிகரித்து வரும் அனைத்து பக்க தாக்குதல்களுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்த போராட்டம் வலுப்பெற்று வரும் நிலையில், முதலாளி வர்க்கம் அனைத்து வகையான பிளவுபடுத்தும் அரசியலையும் ஒடுக்குமுறையையும் பயன்படுத்தி நம்மை பயமுறுத்தி அடிபணிய வைக்க முயல்கிறது.

நமது ஐக்கியப் போராட்டத்தை உறுதியாகத் தீவிரப்படுத்தி, நாம் இந்த அடக்குமுறை அரசுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *