உத்திர பிரதேசத்திலும், அரியானாவிலும் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலைக் கண்டிப்போம்!

அக்டோபர் 3 ம் தேதி, உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் அந்த மாநில துணை முதலமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் மீது அமைச்சரின் வாகனங்கள் வேண்டுமென்றே மோதியதில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். அமைச்சரோடு வந்தவர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த விவசாயிகள் மீது துப்பாக்கியால் சுட்டதால் மேலும் பலர் காயமடைந்தனர். அந்த வாகனங்களை முன்னணியில் வழி நடத்திச் சென்ற அந்தப் பகுதி பாஜக பாராளுமன்ற உறுப்பினரின் மகனும், மத்திய அமைச்சரும் ஆகிய அவன், விவசாயிகள் யாரோடு மோதுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், தன்னுடைய குற்றவியலான வரலாறு மாநிலத்தில் அனைவருக்குமே தெரியுமென அவன் ஆணவத்தோடு கொஞ்சமும் வெட்கமின்றி பெருமையாகப் பேசினான்.

அதே நாளில், அரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் சில நூறு குண்டர்களைத் திரட்டி, தடிகளை எடுத்துக் கொண்டு, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளைத் தாக்குமாறு தனது கட்சி உறுப்பினர்களைத் தூண்டினார். தேவைப்பட்டால் சில நாட்கள் சிறையில் இருப்பதைப் பற்றி அவர்கள் கவலைப்பட வேண்டாம் எனவும், அவர்கள் “ஹீரோக்கள்” என்று கருதப்படுவார்கள் என்றும் அவர் மேலும் அறிவித்தார்.

லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டதை இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி கண்டிக்கிறது. விவசாயிகளுடைய போராட்டத்தை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிப்பதற்காக, அராஜகத்தையும் வன்முறையையும் கட்டவிழ்த்துவிடுமாறு அரியானா மற்றும் உத்தரபிரதேச அரசுகளின் வெட்கக்கேடான அறைகூவல்களை, நாம் கண்டிக்கிறோம்.

மூன்று விவசாய விரோத சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்ற தங்களுடைய நியாயமான கோரிக்கையை ஆதரித்து விவசாயிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக அமைதியாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம், நாடு முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து மக்களிடையேயும் அதிக ஆதரவைப் பெற்று வருகிறது. தங்களுடைய கோரிக்கைகளை ஏற்க மறுக்கும் மத்திய அரசின் அடாவடியான அணுகுமுறையை சந்தித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 500 க்கும் மேற்பட்ட விவசாயி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பான ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா), அரியானா மற்றும் உபி மாநில அரசாங்க அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்யும் போதெல்லாம் அவற்றை எதிர்த்துப் போராட்டங்களை நடத்துமாறு அறைகூவல் விடுத்துள்ளது. இந்த அறைகூவலுக்கு விவசாயிகளின் ஆதரவு பெருமளவில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசும் அந்தந்த மாநில அரசுகளும் விவசாயிகளுடைய போராட்டத்திற்குக் களங்கத்தை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு வேண்டுமென்றே வன்முறைச் சம்பவங்களைத் தூண்டுவிட்டு வருகின்றன.

ஆகஸ்ட் 28 அன்று, அரியானா முதல்வரின் கர்னால் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது அரியானா காவல்துறை கொடூரமான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. முதலமைச்சரின் வருகைக்குப் பொறுப்பான அரசாங்க அதிகாரி, விவசாயிகளின் தலைகளை உடைக்குமாறு காவல் துறையினருக்கு ஆணையிட்டிருக்கிறான்.

லக்கிம்பூர் கெரியில் நடந்தது புதியதல்ல. விவசாயிகள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, பின்னர் வன்முறைக்கு விவசாயிகளையே குற்றம் சாட்டும் கொள்கையை இந்திய அரசு தொடர்ந்து பின்பற்றி வருகிறது.

பத்து மாதங்களுக்கு முன்பு, விவசாயி விரோத சட்டங்களுக்கு எதிராக 2020 நவம்பர் 26 ஆம் தேதி தில்லி வருவதாக விவசாயிகள் அறிவித்தபோது, விவசாயிகளுக்கு எதிராக ​​பஞ்சாப்-அரியானா எல்லையில் மத்திய அரசும் அரியானா அரசும் பெரும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டன. காவல்துறையினர் நெடுஞ்சாலைகளைத் தோண்டியும், சாலைகளில் முள்வேலியிட்டுத் தடுத்தும், விவசாயிகளுக்கு எதிராக தண்ணீர் பீரங்கிகளைக் கொண்டு தாக்கியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், ஒரு எதிரி நாட்டோடு போர் நடத்துவது போல் விவசாயிகளுக்கு எதிராக அரசாங்கங்கள் நடந்து கொண்டன. இருப்பினும் இந்த அனைத்து முயற்சிகளையும் முறியடித்து, விவசாயிகள் தில்லி எல்லையில் அணிதிரள்வதை அவர்களால் தடுக்க முடியவில்லை.

விவசாய போராட்டத்தை அவமதிக்கவும், பிளவுபடுத்தவும் திட்டமிட்ட முறையில் மீண்டும், சனவரி 26 அன்று, மத்திய அரசு வேண்டுமென்றே அராஜகத்தையும் வன்முறையையும் கட்டவிழ்த்து விட்டது. சதித்திட்ட நோக்கத்தோடு, தில்லியில் விவசாயி பேரணியை ஏற்பாடு செய்ய முதலில் விவசாயிகளுக்கு அரசாங்கம் அனுமதி அளித்தது. பின்னர் கடைசி நேரத்தில் வேண்டுமென்றே பேரணியின் வழிகளை மாற்றியது, இதன் விளைவாக சில விவசாயிகள் செங்கோட்டையை வந்தடைந்தனர். பாதையின் பல்வேறு இடங்களில் அரசாங்கம் மோதல்களை திட்டமிட்டு நடத்தினர். பின்னர் விவசாயிகள் தேச விரோதிகள் என்று அது தொடர்ந்து பரப்புரை செய்தது. அரசின் நோக்கமானது, நாட்டின் பரந்துபட்ட மக்களின் பார்வையில் விவசாயப் போராட்டத்தை இழிவுபடுத்துவதாகும்.

நம் நாட்டு விவசாயிகளின் ஒன்றுபட்ட, போர்க்குணமிக்க போராட்டம், அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது. இந்த ஆதரவை பலவீனப்படுத்தவும், விவசாயிகளின் போராட்டத்தை நசுக்குவதற்காகவும், இந்திய அரசு அராஜகத்தையும் வன்முறையையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான இந்த திட்டமிட்ட, ஆத்திரமூட்டும் வன்முறைக்கு ஆட்சியாளர்கள் தான் காரணம் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *