விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்துகிறார்கள்

மக்களுடைய ஆர்பாட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீட்டை பெறப்படுமென அரியானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய மசோதாவிற்கு எதிராக ஆர்பாட்டம் நடத்தப்படுமென மார்ச் 18 அன்று விவசாயிகள் போராட்டம் (கிசான் அந்தோலன்) அறிவித்தது.

ராஜஸ்தான் அனுமான்கர்க் எப்சிஐ அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்பாட்டம்

இந்த மசோதாவிற்கு எதிராக தொழிற் சங்கங்கள், தொழிலாளர் அமைப்புக்கள், வழக்குறைஞர்கள், வர்த்தகர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் அமைப்புகளை அணி திரட்டி ஆர்பாட்டம் நடத்தப்படுமென விவசாயிகள் ஐக்கிய முன்னணி (சம்யுக்த் கிசான் மோர்ச்சா) அறிவித்தது.

கே.எம்.பி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் ஆர்பாட்டம்

ஏப்ரல் 5 ஆம் தேதி, நாடு முழுவதும் எஃப்.சி.ஐ அலுவலகங்களில் விவசாயிகள் ஆர்பாட்டங்களை நடத்தினர்.

ஆந்திராவில் விஜயவாடா மற்றும் அங்கோல், அரியானாவில் கைதல், குருகிராம், ரோதக், பதேபாத், சோனேபட், அம்பாலா, கர்னல் மற்றும் பிற இடங்களிலும், பீகாரில் சீதாமாரியிலும் எப்சிஐ அலுவலகங்களில் விவசாயிகள் எதிர்ப்பு ஆர்பாட்டங்களை நடத்தினர். சிரிகங்காநகர், நாகவூர், சவாய் மாதோபூர் மற்றும் ராஜஸ்தானில் பல இடங்களிலும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பஞ்சாபில் பவானிபூர், சுனாம், பர்னாலா, சங்ரூர், ஜலந்தர், குருதாஸ்பூர், மான்சா மற்றும் அமிரித்சர் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட இடங்களில் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

கே.எம்.பி நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை முற்றுகை

விவசாயிகள் ஐக்கிய முன்னணி (சம்யுக்த் கிசான் மோர்ச்சா) கொடுத்த அறைகூவலை ஏற்று, ஏப்ரல் 10 ஆம் தேதி அன்று கே.எம்.பி நெடுஞ்சாலையை தடுத்து நிறுத்தி 24 மணி நேரம் சாலை மறியல் நடத்தப்பட்டது. விவசாயிகள் தங்களுடைய டிராக்டர் வாகனங்களை 6 வழிச் அதிவேக நெடுஞ்சாலையின் நடுவில் நிறுத்தினர். கே.எம்.பி நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

தில்லியின் எல்லையில் ஆர்பாட்டங்கள் நடைபெறும் இடங்களில் ஏப்ரல் 14 அன்று உழவர் பாதுகாப்பு நாள்,  மே 1 அன்று தொழிலாளி – விவசாயி ஒற்றுமை நாள் உட்பட பல ஆர்பாட்டங்கள் நடத்தப்படுமென திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் பேரணியை நடத்தவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *