மார்ச் 8, 2021: சர்வதேச மகளிர் தினத்தை – தில்லியின் எல்லைகளில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொண்டாடினர்

தில்லியின் எல்லைகளில் 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்ற விவசாயிகள் சர்வதேச மகளிர் தினத்தன்று மிகப்பெரிய கொண்டாட்டங்களை நடத்தியிருக்கின்றனர். பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் பல்வேறு இடங்களிலிருந்து டிராக்டர்கள், வண்டிகள், லாரிகள் மற்றும் பேருந்துகளில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் அங்கு வந்து குவிந்தனர். சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லைகள் மட்டுமின்றி, பல்வேறு பெரும் வர்த்தக வளாகங்களில் விவசாயிகள் மறியல் போராட்டங்களில் அமர்ந்திருந்த இடங்களிலும் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்களை நடத்தினர்.

இந்த கொண்டாட்டங்களில் தில்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலுள்ள விவசாய பெண் செயற்பாட்டாளர்களும் பல பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களும் இணைந்தனர். பாடல்களைப் பாடியதோடு, போர்க்குணமிக்க உரைகளையும் அவர்கள் வழங்கினர். மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்வதையும் தாண்டி பெண்களின் விடுதலைக்கான கதவுகளைத் திறக்கும் ஒரு அடிப்படை சமுதாய மாற்றத்திற்காக போராட்டத்தை விரிவுபடுத்துவதற்கான அவர்களின் தீர்மானத்தை அவர்கள் வெளிப்படுத்தினர்.

திக்ரி, சிங்கு மற்றும் காசிப்பூர் எல்லைகளில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்களின் சில காட்சிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *