மதிய உணவு மற்றும் அங்கன்வாடித் தொழிலாளர்கள் ஆர்பாட்டம்

சனவரி 11 அன்று ஓய்வு பெற்ற மதிய உணவு மற்றும் அங்கன்வாடித் தொழிலாளர்கள், தங்கள் ஓய்வூதியத் தொகையை உயர்த்தக் கோரி, மதிய உணவு தொழிலாளர்கள் தொழிற் சங்கத்தின் கீழ், பெரும் ஆர்பாட்டத்தை சென்னையில் நடத்தினர். தமிழ்நாட்டிலுள்ள 1.5 இலட்சம் ஓய்வு பெற்ற மதிய உணவு மற்றும் அங்கன்வாடித் தொழிலாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக ரூ. 2,000 பெற்று வருகின்றனர். அவர்கள் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,500 கோருகின்றனர்.

அவர்களின் மற்ற கோரிக்கைகளில் அகவிலைப்படி, மருத்துவப்படி, மருத்துவக் காப்பீடு, பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அனுமதி, குடும்ப ஓய்வூதியம் மற்றும் குடும்ப நல நிதி ஆகியவை அடங்கும்.

சம்பந்தப்பட்ட அமைச்சருடன் 2020 பிப்ரவரியில் தொழிற்சங்கம் பேச்சுவார்த்தை நடத்திய போது, குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ 7,850 வழங்க அவர் ஒப்புக் கொண்டார். இருப்பினும், ஓய்வூதிய உயர்வு தொடர்பாக முதல்வருக்கு பலமுறை கடிதம் எழுதிய போதிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தமிழக அரசு தங்களுடைய கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்தாவிடில், பிப்ரவரி 16 முதல் மாவட்டத் தலைநகரங்களில் ஒரு மறியல் போராட்டத்தை நடத்துவோமென தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *