செவிலியர்கள் பணி நிரந்தரம் கோருகின்றனர்

தமிழ்நாடு மருத்துவ சேவை பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNMRB) வேலைக்கு அமர்த்தப்பட்ட 14,000 செவிலியர் மாநிலத்தின் பல்வேறு மையங்களில் சனவரி 11 அன்று ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். தங்களுடைய வேலைகளை முறைப்படுத்தக் கோரி அவர்கள் சென்னை, மதுரை, ஈரோடு, திருநெல்வேலி, திருச்சி மற்றும் கோயம்புத்தூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த செவிலியர்கள், 2015 ஆம் ஆண்டில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு எடுக்கப்பட்டு ஆரம்ப சுகாதார மையங்களில் (பி.எச்.சி) பணியாற்றி வருகின்றனர். அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தரப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ரூ 7000 ஒருங்கிணைந்த ஊதியத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்ட இந்த செவிலியர்களுடைய ஊதியம் 2018 இல் அவர்கள் மேற் கொண்ட போராட்டத்திற்குப் பின்னர் அதிகரிக்கப்பட்டது. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், அவர்கள் பெறும் ஊதியம் நிரந்தரத் தொழிலாளர்களின் மாத ஊதியமாகிய ரூ 40,000-க்குக் குறைவாகவும், பிற சலுகைகள் மறுக்கப்பட்டும் உள்ளனர். அவர்கள் பல போராட்டங்களை நடத்தியிருந்தும் மாநில அரசு அவர்களுடைய கோரிக்கைகளை இன்னும் நிறைவேற்றவில்லை. தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோமென செவிலியர் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *