நவம்பர் 26, 2020 அன்று நடைபெற்ற அனைத்திந்திய பொது வேலை நிறுத்தத்தில் நாட்டின் எல்லா பகுதிகளிலிருந்தும் பல கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் எல்லா தொழில் துறைகளிலிருந்தும் அனைத்துத் தொழிற் சங்கங்களைச் சேர்ந்த, தொழிலாளர்களும் பங்கேற்றனர்.
மிகுந்த கோபத்தோடு பங்கேற்ற இந்தத் தொழிலாளர்கள் அரசின் தொழிலாளர் விரோதச் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்றும், தொழிலாளர்களுடைய உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமெனவும், விவசாய விரோத சட்டங்களை பின்வாங்க வேண்டுமென்றும் கோரினர். தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் நடைபெற்ற போராட்டங்களின் சில காட்சிகள்.