ஊரடங்கிற்கு மத்தியில் – நாடெங்கிலும் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்க்கின்றனர்

தமிழ்நாட்டில் பி.எஸ்.என்.எல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்டனர்

கொரோனா பெருந் தொற்றுநோய் சூழ்நிலையில் பி.எஸ்.என்.எல் நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதற்கு எதிராக தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் (டி.டி.சி.சி.டபிள்யூ) மற்றும் பி.எஸ்.என்.எல் பணியாளர் சங்கம் (பி.எஸ்.என்.எல்.யு) ஆகியவை மே 14 முதல், பல எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்தியுள்ளன. இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும், 22 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், அந்த வேலையை பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. பி.எஸ்.என்.எல் – ஐ தனியாருக்கு விற்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவும் இது காணப்படுகிறது. மேலும், 6,000 த்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள், அவர்களுக்கான எட்டு முதல் பதினைந்து மாதங்களுக்கான ஊதியத்தை இன்னும் பெறவில்லை என்று தொழிற்சங்கங்கள் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை கூறுகிறது.

பி.எஸ்.என்.எல் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். கொரோனா பெருந் தொற்றுநோய் மற்றும் முடக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் தொழிலாளர்கள் பணிநீக்கம் மற்றும் ஊதியக் குறைப்புக்கள் தொடர்பாக மத்திய தொழிலாளர் அமைச்சரின் ஆலோசனையை அது வெளிப்படையாகவே மீறியிருக்கிறது. இந்த நேரத்தில் தொழிலாளர்களை பணிநீக்கமோ ஊதிய வெட்டுக்களையோ செய்ய வேண்டாம் என்று முதலாளிகளுக்கு பிரதமர் விடுத்த வேண்டுகோளை, இது கேலி செய்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களும் தனியார் முதலாளிகளும் தங்களுடைய லாபத்தைத் தக்க வைத்துக் கொள்ள, தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யலாமெனவும் அவர்களின் ஊதியங்களைக் குறைக்கலாமெனவும் இது ஒரு தெளிவான சமிக்ஞையை அனுப்புகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *