தோழர் பிரவின் மறைவு குறித்து மிகவும் வருந்துகிறோம்

மே 4 அன்று விடியற்காலையில் தோழர் பிரவின் ராம்டெக் நம்மிடமிருந்து பிரிந்துவிட்டதை இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் மத்தியக் குழு மிகுந்த அதிர்ச்சியோடும், துயரத்தோடும் அறிவிக்கிறது. கொரோனா நோயோடு சில நாட்கள் போராடி வந்த அவர் 54 இளம் வயதில் நம்மிடமிருந்து மறைந்துவிட்டார். மராட்டிய மாநிலத்தின் சந்திரப்பூரில் விவசாயம் சார்ந்த ஒரு தொழிலாளி வர்க்க குடும்பத்தில் பிறந்தவர் தோழர் பிரவின். அவருடைய குடும்பத்தில் உயர் கல்வி பெற்ற முதல் மனிதர்

Continue reading

கொரோனா தடுப்பூசியை தனியார்மயமாக்குவது மக்கள் விரோத நடவடிக்கை!

ஏப்ரல் 19 அன்று, கோவிட் தொற்றுநோய் குறித்து நாட்டிற்கு உரையாற்றிய ​​பிரதமர் மோடி, தனது அரசாங்கத்தின் “தாராளமயமாக்கப்பட்ட மற்றும் துரிதப்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி திட்டத்தை” அறிவித்தார். 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் 2021 மே 1 முதல் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தகுதி பெறுவார்கள் என்று கூறி அவர் இதை மக்களுக்கு பரிசளிப்பது போலக் குறிப்பிட்டார். இருப்பினும், அவர் அளித்த விவரங்களும், புதிய தடுப்பூசி கொள்கை குறித்து பின்னர்

Continue reading

சர்வதேச தொழிலாளி வர்க்க தினம், மே தினம் வாழ்க!

இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சியின் அறைகூவல், மே 1, 2021 தொழிலாளர் தோழர்களே, இன்று சர்வதேச தொழிலாளி வர்க்க தினமான மே தினம் ஆகும். உலகம் முழுவதும், கடந்த 131 ஆண்டுகளாக, நமது வர்க்கத்தின் இந்த விழாவைத் தொழிலாளர்கள் கொண்டாடி வருகின்றனர். நம்முடைய இலக்கை நோக்கி முன்னேறுவதற்காக, நாம் நமது வெற்றிகளைக் கொண்டாடுகிறோம், பின்னடைவுகளிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்கிறோம். நமது உடனடிப் பொருளாதார மற்றும் அரசியல் கோரிக்கைகளோடு, ஒருவன் மற்றொருவனை

Continue reading

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் பேரழிவு :

இந்த அமைப்பு முற்றிலும் மக்கள் விரோதமானதென்பது வெட்ட வெளிச்சம்! கொஞ்சநெஞ்சம் இருந்த சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பும் முற்றிலுமாக சீரழிந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் மரணமும் பேரழிவும் தாண்டவமாடுகின்றன. தில்லியிலும் நாடெங்கிலும் உள்ள  பல மருத்துவமனைகள் நோயாளிகளை அனுமதிக்க மறுத்துவிட்டன. கடந்த சில வாரங்களாக, கொரோனா பெருந்தொற்று நோய் காட்டுத்தீ போல் இந்தியாவெங்கும் பரவி வருகிறது. மிகவும் நோய்வாய்ப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள், சுவாசிக்க முடியாமல், தங்களுடைய நெருங்கிய சொந்தங்களால் மருத்துவமனைகளுக்கு அவசர

Continue reading

அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் / நிறுவனப்படுத்துதல் கொள்கைகளை தடுத்து நிறுத்திய வெற்றிகரமான போராட்டங்கள்

தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் (காம்கர் ஏக்தா கமிட்டி) ஏற்பாடு செய்திருந்த “தனியார்மயமாக்கலுக்கு எதிராக ஒன்றுபடுங்கள்!” என்ற கூட்டத் தொடரின் பத்தாவது கூட்டம் தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. தனியார்மயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் மூலம் உலகமயமாக்கும் திட்டத்தை பிரதமர் நரசிம்ம ராவ் ஆரம்பித்ததிலிருந்து, நம் நாட்டின் தொழிலாளி வர்க்கம் இந்த திட்டத்தை எதிர்ப்பதில் முன்னணியில் இருந்து வந்திருக்கிறது. தனியார்மயமாக்கலுக்கான தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்குவதற்காக, ஆளும் முதலாளி வர்க்கம்

Continue reading

மே தினம் வாழ்க!

தொழிலாளர் நாம் ஒன்றுபட்டு உரிமைகளை வெல்லுவோம்! சுரண்டல், ஒடுக்குமுறையற்ற இந்தியாவைப் படைப்போம்! தொழிலாளர் தோழர்களே, முதலாளிகளும், நாம் வேலை செய்யும் நிறுவனங்களும் நாள்தோரும் நம் மீது தீவிரத் தாக்குதல்கள் நடத்தி நம்மை ஒடுக்கி வருகிறார்கள். நம்முடைய எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்டு நம்மை அடிமைகளாகவே அவர்கள் நடத்தி வருகிறார்கள். பெரும்பாலான தொழிலாளர்களுக்கு வேலை நிரந்தரம் அறவே மறுக்கப்பட்டு தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளர்களாக நீம் (NEEM), எப்டிஇ (FTE) போன்ற அடிப்படைகளில் மிகக்

Continue reading

வேளாண் பிரச்சனைகள் குறித்து தஞ்சையில் கருத்தரங்கு

தாளாண்மை உழவர் இயக்கமும் பிற விவசாய அமைப்புகளும் இணைந்து விவசாயிகள் பிரச்சினைகள் மற்றும் அவற்றின் தீர்வு குறித்த ஒரு மாநாட்டை தஞ்சாவூரில் ஏப்ரல் 10, 2021 அன்று ஏற்பாடு செய்து நடத்தினர். அத்துடன் தமிழ்நாடு உழவர் இயக்கத்தின் தொடக்க விழாவும் நடைபெற்றது. கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களும் எல்லா விவசாயிகள் மற்றும் அவர்களுடைய அமைப்புக்களின் பரந்த ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டும் என்றும், விவசாயிகளின் அனைத்து உரிமைகளையும் நியாயமான கோரிக்கைகளையும்

Continue reading

விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்துகிறார்கள்

மக்களுடைய ஆர்பாட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீட்டை பெறப்படுமென அரியானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய மசோதாவிற்கு எதிராக ஆர்பாட்டம் நடத்தப்படுமென மார்ச் 18 அன்று விவசாயிகள் போராட்டம் (கிசான் அந்தோலன்) அறிவித்தது. ராஜஸ்தான் அனுமான்கர்க் எப்சிஐ அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்பாட்டம் இந்த மசோதாவிற்கு எதிராக தொழிற் சங்கங்கள், தொழிலாளர் அமைப்புக்கள், வழக்குறைஞர்கள், வர்த்தகர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் அமைப்புகளை அணி திரட்டி ஆர்பாட்டம் நடத்தப்படுமென விவசாயிகள் ஐக்கிய

Continue reading

விமான நிலையங்கள் தனியார்மயப்படுத்தப்படுவதை எதிர்த்து ஏர்போர்ட் அத்தாரிடி ஆப் இந்தியா ஊழியர்கள் மறியல்

2021 மார்ச் 21 அன்று எல்லா விமான நிலையங்களிலும் அனைத்திந்திய அளவில் ஒரு மறியல் ஆர்பாட்டத்தை நடத்துமாறு ஏர்போர்ட்ஸ் அத்தாரிடி ஆப் இந்தியாவின் தொழிற்சங்கங்கள் மற்றும் அசோசியேசன்களுடைய கூட்டமைப்பும், ஏர்போர்ட்ஸ் அத்தாரிடி எம்பிளாயிஸ் யூனியன் ஏஏஇயூ- (AAEU) யும் ஒரு அறைகூவல் விடுத்திருந்தன. இந்த மறியல் ஆர்பாட்டமானது ஏர்போர்ட்ஸ் அத்தாரிடி ஆப் இந்தியா நடத்தி வந்த மேலும் ஆறு விமான நிலையங்களை முதலாளித்துவ ஏகபோகங்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்க முன்வந்துள்ள

Continue reading

நான்கு மாநிலங்கள், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்கள் :

மக்களைப் பெருமளவில் ஏமாற்றுவதற்கும், திசை திருப்புவதற்கும் தேர்தல்கள் ஒரு ஆயுதம் இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி – மத்தியக் குழுவின் அறிக்கை. ஏப்ரல் 6, 2021 தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம், கேரளா மற்றும் புதுச்சேரி சட்டமன்றங்களுக்கு மார்ச்சில் தொடங்கிய தேர்தல்கள் மே 2 ம் முடிவடையும். இந்தத் தேர்தல்கள், நாடு முழுவதும் பொருளாதார நெருக்கடியை அடித்தளமாகக் கொண்டிருக்கும் எல்லா பக்க நெருக்கடியில் சிக்கியிருக்கும் நேரத்தில் நடைபெறுகின்றன. கொரோனா தொற்று

Continue reading